Home /News /international /

அமெரிக்கா-தாலிபன்கள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்கா-தாலிபன்கள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் அடுத்த 14 மாதங்களில் வெளியேறும் வகையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கும், தாலிபன்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் கடந்த 2 ஆண்டுகளாக தாலிபன் அமைப்பினருடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்க அதிகாரிகளுக்கும் தாலிபானின் மூத்த தலைவர்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி அடுத்த 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் படிப்படியாக வெளியேறும்.

ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், இந்தியா சார்பில் தோஹாவுக்கான தூதர் குமரன் உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்தியா தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.
Published by:Yuvaraj V
First published:

Tags: Taliban, US Troops

அடுத்த செய்தி