கர்ப்பிணி போலீஸ் அதிகாரியை தாலிபான்கள் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கோர் (Ghor) மாகாணத்தில் காவல்துறையில் பணியாற்றிய வந்தவர் பானு நிகாரா. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் பெண்களுக்கான உரிமைகளுக்கு எதிரானவர்கள் என கூறப்படுகிறது. தாலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கான சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தாலிபான்கள் தங்களது நிலைப்பாடு குறித்து இதுவரை தெளிவான அறிவிப்புகள் வெளியிடவில்லை. இந்நிலையில் ஆப்கானின் கோர் மாகாணத்தில் காவல்துறையில் பணியாற்றி வந்த பானு நிகாரா என்ற பெண்ணை தாலிபான்கள் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. அந்தப்பெண் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்ப்பிணி என்றும் பாராமல் அவரது குடும்பத்தினர் கணவர் , குழந்தைகள் முன்னிலையில் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
ஆப்கானில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தாலிபான் தலைவர்கள் கூறிவரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித்,” கர்ப்பிணி போலீஸ் அதிகாரியை தாலிபான்கள் கொலை செய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றது வருகிறது” என்றார். மேலும் பேசியவர் முந்தைய அரசில் பணியாற்றியவர்களை நாங்கள் பழிவாங்க மாட்டோம் எனக் கூறியிருந்தோம், பேனு நிகாரா கொலைக்கு தனிப்பட்ட பகை அல்லது வேறு எதாவது காரணமாக இருக்கலாம் என்றார்.
அந்தப்பெண்ணின் உறவினர்கள் , தாலிபான்கள் தான் அவரை கொன்றதாக குற்றஞ்சாட்டுகின்றனர். 3 நபர்கள் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்து அந்தப்பெண்ணை தேடினர். அவர்கள் அனைவரும் அரபியில் பேசினர். வீட்டில் இருந்த அந்தப்பெண்ணின் குடும்பத்தினரை கட்டிப்போட்டு அவர்களது கண் முன்னே சுட்டுக்கொன்றதாக கூறுகின்றனர்.
Also Read: காதலியை கொன்று பிளேடால் தோலை அகற்றிய கொடூரன் – சிக்கலான வழக்கில் காதலனை கைது செய்த போலீஸ்
ஆப்கானின் முந்தைய அரசில் பணியாற்றியவர்களை நாங்கள் பழிவாங்க மாட்டோம் என தாலிபான் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக கூறியிருந்தனர். இருப்பினும் ஆப்கானில் விமான பணிப்பெண்களாக பணியாற்றியவர்கள், பியூட்டிசியனாக பணியாற்றிய பெண்கள் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அவர்கள் பதுங்கியுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.