தைவானில் கோர ரயில் விபத்து; மலையிலிருந்து விழுந்த லாரியினால் ரயில் தடம் புரண்டு 36 பேர் பலி

தைவான் ரயில் விபத்து.

வெள்ளிக்கிழையமான இன்று தைவானில் கோர ரயில் விபத்து நிகழ்ந்தது. இதில் 36 பேர் பலியாக, குறைந்தது 72 பேர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 • Share this:
  வெள்ளிக்கிழையமான இன்று தைவானில் கோர ரயில் விபத்து நிகழ்ந்தது. இதில் 36 பேர் பலியாக, குறைந்தது 72 பேர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

  இந்த விரைவு ரயில் தைபேயிலிருந்து தைத்துங்குக்கு சுமார் 350 சுற்றுலா பயணிகளுடன் சென்றது. கிழக்கு தைவானின் ஹுவாலியன் வடக்குப் பகுதியில் குகை ஒன்றில் செல்லும் போது இந்த ரயில் தடம்புரண்டுள்ளது. குகையில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டதால் போகும் வழி அடைக்கப்பட்டு மீட்புப் பணிகள் கடும் சிக்கலாகியுள்ளன.  விபத்துக்குப் பிறகு ரயிலின் முதல் 4 பெட்டிகளிலிருந்து சுமார் 80-90 பேரை மீட்டுள்ளனர். குகைப்பாதையில் சிக்கிய பெட்டிக்குள்ளிலிருந்து குழந்தைகளும் பெண்களும் அலறும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் குலைநடுங்கச் செய்கின்றன.

  அதிகாரபூர்வ செண்ட்ரல் நியூஸ் ஏஜென்சி தகவல்களின் படி சரியாக நிறுத்தப்படாத லாரி ஒன்று மலையிலிருந்து ரயில் பாதையில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது, இதில் மோதிதான் ரயில் தடம்புரண்டதாக கூறப்படுகிறது.  தைவான் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட செய்தியில் ரயில் லாரி மீது மோதியது என்று ஒருவர் கூறியிருந்தார். லாரி உடைந்து நொறுங்கி விழுந்ததையும் சிலர் பார்த்துள்ளனர். ரயிலின் முன் பகுதி குகைக்கு வெளியே உள்ளது. குகைக்குள் சிக்கிய பெட்டியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  தய்வானின் மலைகள் நிரம்பிய இந்தப் பகுதி சுற்றுலாப்பயணிகளின் பெருவிருப்பமான பகுதியாகும்.

  பொதுவிடுப்பு தினமான இன்று காலை 9 மணியளவில் டொரொகோ கார்ஜ் என்ற இயற்கை எழில் நிரம்பிய பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.

  தைவானில் இதற்கு முன்பாக 2018 அக்டோபர் மாதத்தில் ரயில் தடம் புரண்டதில் 18 பேர் பலியாகி 200 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: