ஹோம் /நியூஸ் /உலகம் /

பாட்டு பாடுங்க.. காசு கொடுக்க வேண்டாம்.. தைவானில் கலக்கும் இலவச டாக்சி ட்ரைவர்..

பாட்டு பாடுங்க.. காசு கொடுக்க வேண்டாம்.. தைவானில் கலக்கும் இலவச டாக்சி ட்ரைவர்..

 தைவானில் கலக்கும் இலவச டாக்சி ட்ரைவர்!

தைவானில் கலக்கும் இலவச டாக்சி ட்ரைவர்!

தைவானில் டாக்சி டிரைவர் ஒருவர், பாட்டு பாடும் பயணிகளுக்கு கட்டணமில்லாமல் அவர்கள் செல்லும் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

டாக்சி என்றால் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது சென்னை, மும்பை போன்ற நகரங்கள் தான். மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இந்த நகரங்களில் பேருந்து மற்றும் ரயில்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க முடியாது. ஒரு இடத்துக்கு விரைவாக செல்ல வேண்டுமானால் உடனடியாக டாக்சியை (Taxi) தேர்வு செய்வார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அதிகமான கட்டணம் காரணமாக அவசர தேவைக்கு மட்டுமே டாக்சியை பயன்படுத்துவது என்ற நிலை வந்துவிட்டது. 

இப்படியான சூழலில் கட்டணமில்லா டாக்சி சேவை வழங்கப்பட்டால்? எப்படி இருக்கும். தனிநபர் ஒருவர் கட்டணமில்லாமல் இந்த சேவையை வழங்குகிறார் என்றால் நம்ப முடிகிறதா? தைவானில் டாக்சி ஓட்டுநர் ஒருவர் இலவசமாக டாக்சி சேவையை வழங்குகிறார். ஆனால், அனைவருக்கும் கிடையாது. அவரது டாக்சியில் பயணிக்கும் பயணிகள் கரோக்கி (karaoke) பாடலை பாடினால் கட்டணமில்லாத சேவை மற்றும் பரிசுகளையும் கொடுக்கிறார். தூ சிங் லையாங் (Tu Ching Liang) என்பவர் தான் இந்த சலுகைகளை பயணிகளுக்கு வாரி வழங்குகிறார். 

சிறிய மஞ்சள் நிற டாக்சியை வைத்திருக்கும் அவர், தன்னுடைய டாக்சியில் பயணிக்கும் பயணிகளை கரோக்கி பாடலை பாடுமாறு கேட்டுக்கொள்கிறார். அவருடையை கோரிக்கையை ஏற்று பாடும் பயணிகளுக்கு, இலவச பயணத்துடன் பரிசுகளையும் வழங்குகிறார். இது குறித்து பேசிய தூ சிங் லையாங், " என்னைப்போன்ற ஒரு அதிர்ஷ்டசாலியை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது. நாள்தோறும் வேலைக்கு வேகவேகமாக சென்று பணம் சம்பாதிக்காமல் வரும் ஒரே நபர் நானாக மட்டுமே இருப்பேன். என்னுடைய டாக்சியில் பயணிக்கும் பயணிகள் கரோக்கி பாடலை பாடினால், அவர்கள் விரும்பும் இடத்துக்கு இலவசமாக பயணிக்கலாம். 

' isDesktop="true" id="390763" youtubeid="FVq0PHoLvpM" category="international">

நான் 27 வருடங்களாக டாக்சியை ஓட்டி வருகிறேன். கடந்த 8 வருடங்களாக கரோக்கி பாடலை பாடும் பயணிகளுக்கு இலவச டாக்சி சேவையை அளித்து வருகிறேன்" என்றார். தைவானில் லையாங்கைப்போன்று வேறுபல டாக்சி ஓட்டுநர்களும் கரோக்கி பாடினால் இலவச டாக்சி சேவையை வழங்குகின்றனர். ஆனால், லையாங், தன்னுடைய டாக்சியில் பாடுபவர்களின் திறமைகளை உலகுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் அதனை வீடியோ பதிவு செய்து யூடியூப்பிலும் (Youtube) பதிவேற்றம் செய்கிறார். அவருடைய யூடியூப் சேனலுக்கு 20,000 சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர்.

கரோக்கி சிறப்பாக பாடுவதால் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளதாக லையாங் தெரிவித்துள்ளார். இதுவரை 10 ஆயிரம் வீடியோக்களை பதிவு செய்து வைத்துள்ளதாக கூறும் அவர், சிறப்பாக கரோக்கியை பாடுபவர்களை ஊக்கப்படுத்தி சூப்பர் ஸ்டார்களாக மாற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் லையாங் தெரிவித்தார்.

' isDesktop="true" id="390763" youtubeid="17mKiULPllc" category="international">

மேலும், சர்வதேச அளவில் தனக்கு புகழ் இருப்பதாகவும் லையாங் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். தைவானில் உள்ள டாக்சி ஆப்களில் கரோக்கி என்ற ஆப்சன் பிரத்யேகமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கரோக்கி பாடுவதால் இலவச சேவையை கொடுக்கும் டாக்சியை அவர்கள் தேர்தெடுத்துக்கொள்ளலாம்.

First published:

Tags: Taiwan