அரசு ஊழியர்கள் முதல் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வரை மாதந்தோறும் அவர்களுக்கான சம்பளத்தைப் பெற்றாலும், பண்டிகை நாள்களில் போனஸ் அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கும். இந்த நேரத்தில் ஒரு மாதம் சம்பள பணத்தைப் போனஸாக கொடுக்கிறோம் என்ற அறிவிப்பு ஊழியர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.
இந்த சூழலில் 52 மாத சம்பளத்தை போனஸாக கொடுக்கிறோம் என்ற அறிவிப்பு வந்தால் சொல்லவா வேண்டும்? உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கத் தான் தோன்றும். தற்போது இந்த மனநிலையில் தான் உள்ளனர் தைவானைச் சேர்ந்த கப்பல் நிறுவன ஊழியர்கள். ஏன் இந்த அறிவிப்பு? எதற்காக என இங்கே தெரிந்து கொள்வோம்.
தைவானின் டாயூவான் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் தான் எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம். இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் உள்ள நிலையில் பத்தாயிரத்தும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள ஒவ்வொரு பணியாளர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பினால் கப்பல் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் வருவாயை எட்டும். இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் தனிப்பட்ட செயல்திறன் அடிப்படையில் அவர்களுக்கு போனஸ் வழங்கப்படும்.
இதுப்போன்று தான் எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனம் 2021 ஆம் ஆண்டு இறுதியில் தனது லாபத்தில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கியது. அப்போது அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு 40 மாத சம்பளத்தைப் போனஸாக வழங்கியது. இந்நிலையில் தான் சென்ற ஆண்டு அதாவது 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் எவர்கிரீன் மரைன் நிறுவனத்தின் லாபம் மட்டும் ஒரு லட்சத்து 98 ஆயிரம் கோடி என தகவல் வெளியானது. இதற்காக உழைத்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக போனஸ் தொகையை எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் அண்மையில் ஊழியர்களுக்கு வழங்கியது.
Also Read : 20 கிலோ ஆடை.. மைனஸ் 50 டிகிரி குளிரில் அசால்டாக வாழும் அதிசய மனிதர்கள்
குறைந்தபட்சம் 45 மாத ஊதியமும் திறன்வாய்ந்த ஊழியர்களுக்கு 52 மாத ஊதியமும் போனஸாக வழங்கப்பட்டன. இதன்படி இந்நிறுவனத்தில் புதிதாக பணியில் சேரும் ஜீனியர் லெவல் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 1.35 லட்சம் சம்பளமும், கடைநிலை ஊழியர்களுக்கு 52 மாத ஊதியமாக ரூ. 70 லட்சம் வரை போனஸ் கிடைத்திருக்கிறது என நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த போனஸ் அறிவிப்பு என்பது அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் சரக்குக் கட்டணங்கள் வீழ்ச்சி அடையும். இது உலக வளர்ச்சியை வேகமாக பலவீனப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், இந்த ஆண்டு லாபத்தை பாதிக்கும் என்று கப்பல் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதன்படி தான் எவர்கிரீன் மரைனின் பங்கு 2021 ஆம் ஆண்டில் 250% ஆதாயத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு 54% சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Taiwan, Viral News