Home /News /international /

தைவானில் அதிகரிக்கும் போர் பதற்றம் - சர்வதேச ஆதரவு கோரும் தைவான் அதிபர்!

தைவானில் அதிகரிக்கும் போர் பதற்றம் - சர்வதேச ஆதரவு கோரும் தைவான் அதிபர்!

அதிபர் சாய் இங்-வென்

அதிபர் சாய் இங்-வென்

சீனாவின் போர் ஒத்திகை நடவடிக்கை உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தைவான் பிராந்தியத்தைச் சுற்றி சீனாவால் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைத் தடுக்க சர்வதேச அளவில் தைவான் அதிபர் சாய் இங்-வென் ஆதரவு கோரியுள்ளார்.

    சீனா, தைவானைத் தனி நாடக அங்கீகரிக்காமல் சீனாவின் ஒரு பங்கு என்று உலக அரங்கில் வெளிப்படுத்தி வருகிறது. தைவான் தனியாக ஜனநாயகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பினும் சீனா தனது அங்கீகாரத்தை நிலைநிறுத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் அமெரிக்க நாட்டின் சபாநாயகரான நான்சி பெலோசி ஆசியா சுற்றுப் பயணத்தில் சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்குச் சென்றார்.

    இதனை அடுத்து சீனா தைவான் மேல் வர்த்தக தடை விடுத்ததுடன், தைவானைச் சுற்றி மாபெரும் போர் ஒத்திகை நடத்தியது. அமெரிக்க நாட்டின் சபாநாயகரான நான்சி பெலோசி தைவான் ஆதரிப்பதாகக் கூறியதற்குச் சீனா அமெரிக்காவிற்குக் கண்டனம் தெரிவித்தது.

    Also Read :கியூபாவில் மின்னல் தாக்கியதில் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து - 121 பேர் காயம்

    தைவான் தன்னை தனி நாடக செயல்படுத்துவதில் மும்முரமாக உள்ள நிலையில் சீனா, தைவான் பிராந்தியத்தைச் சுற்றி வான் வழி, கடல் வழி, நில வழி என்று ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது. மேலும் வலிமையான போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது.



    இந்த நிலையில் தைவான் அதிபர் சாய் இங்-வென் சர்வதேச அளவில் ஆதரவு கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவின் ராணுவ நடவடிக்கைகளைத் தைவான் அரசு மற்றும் ராணுவம் கவனித்துக்கொண்டு இருப்பதாகவும், மேலும் தேவைக்கேற்ப தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தைவானைச் சுற்றி நடக்கும் பாதுகாப்பு முறிவை நிறுத்த சர்வதேச ஆதரவைக் கோரியுள்ளார்.

    Also Read :புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் கொரோனா பரவல்.. 80,000 சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கித்தவிப்பு

    மேலும் தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சகம், சீனா நாட்டின் ராணுவ விமானங்கள் தைவான் சுற்றி வருவதாகவும், அதில் சில எல்லையை தாண்டியதாகவும் தெரிவித்துள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: America, China, Taiwan

    அடுத்த செய்தி