ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசிய நாடு..!

தைவான் நாடாளுமன்றம் முன்னர் ஆயிரக்கணக்கான எல்ஜிபிடி மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் எல்ஜிபிடி கொடிகளை அசைத்து மகிழந்து வருகின்றனர்.

Web Desk | news18
Updated: May 17, 2019, 4:00 PM IST
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசிய நாடு..!
எல்ஜிபிடி (மாதிரிப்படம்)
Web Desk | news18
Updated: May 17, 2019, 4:00 PM IST
ஆசியாவிலேயே ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு என்ற பெருமையை தைவான் பெற்றுள்ளது.

கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஒரே பாலின திருமண சட்டத்தை தைவான் அரசு சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இப்புதிய சட்டம் மூலம் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் அதற்கு தைவான் அரசு சட்டப்பூர்வமாக உதவும் என்றும் இத்திருமணங்களை அரசிடம் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் அந்நாட்டைச் சேர்ந்த எல்ஜிபிடி சமூகத்தார் புதிய உத்தரவுக்கு ஆதரவாக நாடெங்கும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தைவான் நாடாளுமன்றம் முன்னர் ஆயிரக்கணக்கான எல்ஜிபிடி மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் எல்ஜிபிடி கொடிகளை அசைத்து மகிழ்ந்து வருகின்றனர்.

இப்புதிய சட்டத்துக்கு அடுத்தபடியாக ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற அனுமதி, தத்தெடுத்தல் ஆகிய நடைமுறைகளுக்கும் எல்ஜிபிடி மக்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தைவான் எல்ஜிபிடி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: 669 செக்ஸில் ஈடுபடுங்கள்... ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கிய அலிபாபா ஓனர்!
First published: May 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...