லாரி செல்லும் போதே இடிந்து விழுந்த பாலம் - வைரலாகும் சிசிடிவி காட்சி

லாரி செல்லும் போதே இடிந்து விழுந்த பாலம் - வைரலாகும் சிசிடிவி காட்சி
மேம்பாலம்
  • News18
  • Last Updated: October 2, 2019, 6:21 PM IST
  • Share this:
தைவானில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தைவானில் உள்ள நன்ஃபாங்கோ நகரில் அண்மையில் கடும் புயல் தாக்கிய நிலையில், அங்குள்ள 460 அடி நீளம் கொண்ட பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த வாகனங்கள் கடலில் மூழ்கின.

பாலத்திற்கு அடியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் இருந்தவர்களும் இடிபாடுகளில் சிக்கினர். இதில், 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன இருவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்களில் இருவர் இந்தோனேசிய மீனவர்கள் என தெரியவந்துள்ளது.


இந்த மேம்பாலம் இடிந்துவிழும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் லாரி ஒன்று பாலத்தின் விளிம்பை எட்டிய நிலையில் அதன் பின்பகுதி விபத்தில் சிக்கியதால் அப்படியே பாலத்துடன் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.வீடியோ பார்க்க: புதுச்சேரியில் போலீசார் மீது ரவுடிகள் தாக்குதல்!
First published: October 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்