ஒரே பாலினத்தைச் சேர்ந்தோர் திருமணம் செய்துகொள்வது சட்டப்பூர்வமானதுதான் என ஆசியாவிலேயே முதல் நாடாக புதிய சட்டத்தை இயற்றியுள்ளது தைவான்.
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வது சட்டப்பூர்வமானது என நேற்று தைவான் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆண்- பெண் திருமண உறவில் பொருந்தும் அனைத்து சட்டங்களும், பாதுகாப்பு அம்சங்களும் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்தாலும் பொருந்தும் என புதிய சட்டம் விளக்குகிறது.
மேலும், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான நடைமுறையையும் சட்டமாக்கியுள்ளது தைவான். கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகமான சட்டம், நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிற மே மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.
இப்புதிய சட்டம் மூலம் தைவானின் திருமணச் சட்டப்பிரிவும் மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது. பலதரப்பிலிருந்து வரவேற்கப்பட்டாலும் அந்நாட்டின் வலதுசாரி அமைப்புகள் வழக்கம்போல் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தைவான் அரசு கூடுதலாக ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமண செய்து அவர்களில் ஒருவர் இறந்தால், கவனிக்க குழந்தைகள் இல்லாத சூழலில் அரசே வாழ்வாதார உதவியையும் வழங்கத் தயாராக உள்ளதாகவும் சட்டம் இயற்றியுள்ளது.
மேலும் பார்க்க: பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு - சவுதி இளவரசர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Same-sex Marriage, Taiwan