சிரியாவில் ஒரு சிறுமி குண்டுவிழும்போது சிரிக்கும் வீடியோ சில நாட்கள் முன்பு இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது. தற்போது அந்த சிறுமி துருக்கியில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சல்வா என்ற அந்த 3 வயது சிறுமி சிரியாவில் தனது தந்தையுடன், குண்டுமழை பொழியும் போது வாய்விட்டு சிரிக்கும் வீடியோ சில நாட்கள் முன்பு இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது.
what a sad world,
To distract 4-year old Selva, her father Abdullah has made up a game.
Each time a bomb drops in Idlib #Syria, they laugh, so she doesn’t get scared.
குண்டு விழும்போதேல்லாம் இப்படி சிரிக்க அவர் தந்தை பழக்கப்படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார். அந்த வீடியோ, சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரின் உக்கிரத்தை உலகுக்கு உணர்த்துவதாக இருந்தது.
இந்நிலையில், தற்போது அந்தக் குழந்தை குடும்பத்தினருடன் பத்திரமாக துருக்கியில், இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாங்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதாக துருக்கி அரசும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.