பொது இடங்களில் முகத்தை மறைக்கக்கூடாது... புர்கா அணிவதற்கு தடை விதித்த சுவிட்சர்லாந்து அரசு!

பொது இடங்களில் முகத்தை மறைக்கக்கூடாது... புர்கா அணிவதற்கு தடை விதித்த சுவிட்சர்லாந்து அரசு!

மாதிரி படம்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் குறுகிய சதவீதத்தில் வெற்றியைப் பெற்றதை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பொது இடங்களில் புர்காவை கொண்டு முகத்தை மறைப்பதை தடை செய்வதற்கான தீவிர வலதுசாரி முன்மொழிவு அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் குறுகிய சதவீதத்தில் வெற்றியைப் பெற்றதை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய மினாரெட்டுகளுக்கு 2009ம் ஆண்டு தடை விதித்த அதே குழுவினரால் இந்த முன்மொழிவு இப்போதும் முன்வைக்கப்பட்டது. 51.2% தடை வேண்டும் என்றும் 48.8% தடை வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர்.

இந்த குறுகிய வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட சுவிஸ் அரசியலமைப்பை திருத்துவதற்கான நடவடிக்கை, தற்காலிக அதிகாரபூர்வ முடிவுகள் காட்டின. இஸ்லாமிய அமைப்புகள் முக்காடு மற்றும் புர்கா அணிவதை தடை செய்யவே தான் இந்த மசோதா வந்துள்ளது என கூறி பலரும் வீதிகளில் இறங்கி வன்முறைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.“சுவிட்சர்லாந்தில், மக்கள் தங்கள் முகத்தை மற்றவர்களுக்கு காண்பிக்கவேண்டும். அதுவே சுவிட்சர்லாந்தின் பாரம்பரியம். இது நம் அடிப்படை சுதந்திரங்களின் அடையாளம் ”என்று வாக்கெடுப்பு குழுவின் தலைவரும் சுவிஸ் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வால்டர் வோப்மேன் வாக்களிப்பதற்கு முன்பு கூறியிருந்தார்.

முக மறைப்பு "இந்த தீவிர, அரசியல் இஸ்லாத்தின் அடையாளமாகும், இது ஐரோப்பாவில் பெருகிய முறையில் முக்கியத்துவம் பெற்றது இருந்தும் கூட அதற்கு சுவிட்சர்லாந்தில் இடமில்லை" என்று அவர் கூறினார். முஸ்லீம் குழுக்கள் வாக்களிப்பைக் கண்டித்து, அதை சவால் செய்வதாக வால்டர் வோப்மேன் கூறினார். "இன்றைய முடிவு பழைய காயங்களை மீண்டும் நினைவூட்டுகிறது, சட்ட சமத்துவமின்மையின் கொள்கையை மேலும் விரிவுபடுத்துகிறது, மேலும் முஸ்லிம் சிறுபான்மையினரை சமூகத்திலிருந்து விலக்குவதற்கான தெளிவான சமிக்ஞையை இது அனுப்புகிறது" என்று சுவிட்சர்லாந்தில் உள்ள முஸ்லிம்களின் மத்திய கவுன்சில் தெரிவித்துள்ளது.

சுவாரஸ்யமாக, சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட யாரும் புர்கா அணிவதில்லை, சுமார் 30 பெண்கள் மட்டுமே நிகாப் அணிகிறார்கள் என்று லூசெர்ன் பல்கலைக்கழகம் மதிப்பிடுகிறது. 8.6 மில்லியன் மக்கள்தொகையில் வெறும் 5% முஸ்லிம்கள் தான் உள்ளனர் அதிலும் பெரும்பாலானவர்கள் துருக்கி, போஸ்னியா மற்றும் கொசோவோவை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம், சுவிட்சர்லாந்து பிரான்ஸ் போன்ற பிற நாடுகளில் பொது இடங்களில் முகத்தை மறைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு சுவிஸ் மாநிலங்கள் பொது இடங்களில் முகத்தை மறைக்க தடை விதித்துள்ளது.

இப்போது பொது இடங்களில் முகத்தை மறைக்க தடை விதித்துள்ள நாடுகளின் பட்டியலை காண்போம்.

பிரான்ஸ்:

2011ம் ஆண்டில், “2010-1192 சட்டத்தின் மூலம் முகம் மறைப்பதை பிரான்ஸ் தடை செய்தது: பொது இடத்தில் முகத்தை மறைப்பதைத் தடுக்கும் சட்டத்துடன்" புர்காவிற்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளது. இந்தச் சட்டம் 14 செப்டம்பர் 2010 அன்று பிரான்சின் செனட்டால் நிறைவேற்றப்பட்டது. மாஸ்க்குகள், தலைக்கவசங்கள், பாலாக்லாவாக்கள், நிகாப்ஸ் மற்றும் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் பிற முக்காடு உள்ளிட்டவற்றை ஒருவர் அணிய இந்த சட்டம் தடை செய்தது. முகத்தை மூடும் புர்காவும் இந்தத் தடையில் அடங்கும். குடியேற்றம், தேசியவாதம், மதச்சார்பின்மை, பாதுகாப்பு மற்றும் பாலியல் குறித்து மக்கள் கவலைகளை எழுப்பியதால் இந்தத் தடை பொதுமக்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பு அபாயத்தின் அடிப்படையில் ஒருவரின் முக மறைப்புகள் தெளிவான அடையாளத்தை தடுத்து நிறுத்துவதாகவும், இஸ்லாமிய நடைமுறைகளின் கீழ் பெண்கள் முகத்தை மறைக்க ‘கட்டாயப்படுத்துவது’ பாலியல் மற்றும் அடக்குமுறை என்றும் தடைக்கு ஆதரவளிக்கும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். தடையை எதிர்ப்பவர்கள் அவர்களின் தன்னலத்திற்க்காக முஸ்லிம்களை குறிவைப்பதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

Also read... டிவிட்டரில் பெண்கள் எப்படி? வெளியான சர்வே... சென்னை பெண்கள் அதிகம் பேசும் டாப்பிக் என்ன?

பெல்ஜியம்:

பெல்ஜியத்தில் 2011 முதல் பொதுவில் புர்காக்கள் உள்ளிட்ட முழு முக மறைப்பவை தடை செய்யப்பட்டன. சட்டத்தை மீறும் நபர்கள் ஏழு நாட்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், பெல்ஜியத்தில் சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர், அவர்களில் 300 பேர் மட்டுமே புர்கா அல்லது நிகாப் அணிகிறார்கள்.

டென்மார்க்:

டென்மார்க்கில் 2018ம் ஆண்டு மே மாதத்தில் சட்டத்தை சரிபார்த்த பின்னர் ஆகஸ்ட் 2018 முதல் புர்காக்கள் தடை செய்யப்பட்டன. இந்தச் சட்டம் குற்றவாளிகளுக்கு €135 வரை அபராதம் விதிக்கிறது.

ஆஸ்திரியா:

ஆஸ்திரியாவில், முகத்தை மறைப்பதற்கு எதிரான சட்டம், மக்கள் தங்கள் முகத்தை தலையிலிருந்து கன்னம் வரை மறைக்கக்கூடாது என்று கட்டளையிடுகிறது. இந்தத் தடை 2017 முதல் நடைமுறையில் உள்ளது. சட்டத்தை மீறுபவர்களுக்கு €150 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

பல்கேரியா:

பல்கேரியாவில், 2016 முதல் புர்கா தடை நடைமுறையில் உள்ளது, தடையை மீறுபவர்களுக்கு 750 டாலர் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும், விளையாட்டு வீராங்கனைகள், வேலை செய்பவர்கள், அல்லது வீட்டில் பிரார்த்தனை செய்பவர்களுக்கு இது விலக்கு அளித்துள்ளது.

நெதர்லாந்து:

நெதர்லாந்தில், பொதுவெளியில் முகத்தை மறைப்பவர்களுக்கு குறைந்தது €150 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தடை புர்காக்கள், முக்காடுகள் முழு முகத்தை மூடும் தலைக்கவசங்கள் மற்றும் பாலாக்லாவாக்களுக்கு பொருந்தும். 14 வருட விவாதத்திற்குப் பிறகு இந்தத் தடை நெதர்லாந்தில் நடைமுறைக்கு வந்தது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: