Home /News /international /

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவேக்சின் தடுப்பு மருந்துக்கு சுவிட்சர்லாந்து அரசு அங்கிகாரம்!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவேக்சின் தடுப்பு மருந்துக்கு சுவிட்சர்லாந்து அரசு அங்கிகாரம்!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவேக்சின் தடுப்பு மருந்துக்கு சுவிட்சர்லாந்து அரசு அங்கிகாரம் அளித்துள்ளது. பிரிட்டனும் விரைவில் அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள தற்போது வரை தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. பூனேவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சீரம் நிறுவனம் கோவிஷீல்டை தயாரிக்கிறது. ஹைதராபாத்திலிருந்து செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சினை உற்பத்தி செய்கிறது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு உலக சுகதார மையம் ஏற்கெனவே அங்கிகாரம் அளித்துள்ள நிலையில் கடந்த 3- ஆம் தேதி கோவாக்சினுக்கும் அங்கிகாரம் அளித்தது.

    பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் 8வது தடுப்பூசியாக கோவாக்சினை அவசரகால பயன்பாட்டுக்கு பட்டியலிட்டுள்ளோம்.

    அவசரகால பயன்பாடுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் அந்தந்த நாடுகளே இறக்குமதி செய்துக்கொள்ளலாம். இதனால் தடுப்பூசியில் சமநிலையை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது.

    இதனை தொடர்ந்து, கோவேக்சின் தடுப்பூசிக்கு சுவிட்சர்லாந்து அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. கனடாவும் கோவேக்சின் தடுப்பூசியை மதிப்பீடு செய்து வருகிறது. இந்தியர்கள் அதிகம் பயணம் செய்யும் வெளிநாடுகளில் ஒன்றான பிரிட்டன் கோவேக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அங்கீகாரம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகள், கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு ஏற்கெனவே அங்கீகாரம் அளித்துள்ளன. அமெரிக்காவில், 2 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

    உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியை கடந்துள்ளது. இதில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Covaxin

    அடுத்த செய்தி