Home /News /international /

தனிமையில் வாழும் முதியவர்களுக்கு ‘நேர வங்கி’ அறிமுகப்படுத்திய சுவிஸ் அரசு 

தனிமையில் வாழும் முதியவர்களுக்கு ‘நேர வங்கி’ அறிமுகப்படுத்திய சுவிஸ் அரசு 

முதியவர்

முதியவர்

நேர வங்கி (டைம் பேன்க்) திட்டத்தின் படி, நீங்கள் ஒரு முதியவருடன் எவ்வளவு மணி நேரம் செலவு செய்கிறீர்களோ, அத்தனை நேரம் உங்களுடைய பெயரில் இருக்கும் நேர வங்கியில் சேமிக்கப்படும்.

தனித்து வாழ்வது அல்லது தனிமையில் வாழ்வது எல்லோருக்கும் விருப்பமானது கிடையாது. ஒரு சிலர் தனிமையை தீவிரமாக விரும்பினாலும், சூழ்நிலை காரணமாக தனிமையில் வாடுபவர்கள் பலருக்கும் தனித்திருப்பது மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. பல முதியவர்கள் பிள்ளைகள் இல்லாமல் தனித்து வாழ்வது மிகவும் கொடுமையானதாகவே காணப்படுகிறது.

பிள்ளைகள் படிப்பு, உயர்கல்வி அல்லது வேலை காரணமாக வேறு ஊர்களில் அல்லது வெளிநாட்டில் பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்படுவதால் வயதான காலத்தில் தன்னை தானே பார்த்துக் கொள்வது முதியவர்களுக்கு மன ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். முதியவர்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக சுவிட்சர்லாந்து அரசு ‘நேர வங்கி’ என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதியோர் நலனுக்காக ‘நேர வங்கி’

சுவிஸ் நாட்டில் தனிமையில் வாழும் முதியவர்களுக்கு ஆதரவாக அல்லது அவர்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள் முன்வரலாம். தனிமையில் வாழும் முதியவர்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்து அவர்களின் ஆரோக்கியத்தையும் மன நலத்தையும் மேம்படுத்த உதவும் என்று என்பதற்காகவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

நேர வங்கி (டைம் பேங்க்) திட்டத்தின் படி, நீங்கள் ஒரு முதியவருடன் எவ்வளவு மணி நேரம் செலவு செய்கிறீர்களோ, அத்தனை நேரம் உங்களுடைய பெயரில் இருக்கும் நேர வங்கியில் சேமிக்கப்படும். உதாரணமாக, இன்று நீங்கள் ஒரு முதியவர் உடன் ஒரு மணி நேரம் செலவழித்தால், அந்த ஒரு மணி நேரம் உங்களுடைய நேர வங்கிக் கணக்கில் சேமிக்கப்படும்.

ALSO READ |  போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் தொடங்க வேண்டுமா? உங்கள் கையில் இவ்வளவு தொகை இருந்தால் போதும்!

‘டைம் யூனிட்’ டெப்பாசிட்

முதியவர்களுடன் செலவழிக்கப்பட்ட நேரம் ‘டைம் யூனிட்’ என்ற அளவில் ஒவ்வொரு நபரின் சோஷியல் செக்யூரிட்டி கணக்கில் சேர்க்கப்படும். மாதா மாதம் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகை போல டைம் மற்றவர்களுக்காக செலவிடும் நேரம், டைம் யூனிட் என்ற திட்டத்தின் கீழ் சேமிக்கப்பட்டு, வேலையிலிருந்து ஓய்வு பெறும் காலம் வரை சேர்க்கப்பட்டு வரும். பின்னர் நேர வங்கி உங்களுக்குத் தேவைப்படும் போது தன்னார்வலர்களை உதவிக்கு அனுப்பும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

இது முழுக்க முழுக்க தன்னார்வலர்களுக்கான திட்டமாகும். முதியோர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. எவ்வளவு நேரம் நீங்கள் உதவி செய்தீர்களோ, அதிக அளவிலான நேரத்தில் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

எதிர்காலத்தில் நீங்கள் தனிமையில் இருக்க நேரிடும் போதோ அல்லது உங்கள் உறவினரோ அல்லது பெற்றோரோ தனிமையில் இருக்கும்போதோ, அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் உங்கள் நேர வங்கியில் எவ்வளவு சேமிக்கப்பட்டிருக்கிறதோ அதே அளவு உங்களுக்காக / உங்களுடன் நேரம் செலவு செய்ய மற்றவர்கள் உதவியைப் பெறுவீர்கள்.

ALSO READ |  அவசர தேவைக்கு PF கணக்கில் ரூ.1 லட்சம் எடுக்கலாம் எப்படி தெரியுமா?

என்ன உதவிகள் / ஆதரவு தேவைப்படும்

இந்தத் திட்டத்தின் கீழ் முதியவர்களுடன் நேரம் செலவழிப்பது என்பது பலவற்றைக் குறிக்கிறது. அவர்களுக்கு தொழில்நுட்பம் சம்மந்தப்பட்ட வேளைகளில் உதவியாக இருக்கலாம் (மொபைல் சாதனங்களை இயக்குவது, சமூக வலைத்தளங்கள்); அவர்களுடன்  உரையாடி நேரம் செலவழிக்கலாம்; குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளலாம்; தோட்ட வேலை செய்யலாம்; வீடு ரிப்பேர் செய்யலாம்; சமைத்துக் கொடுக்கலாம் அல்லது அவர்களுக்கு தேவையான எந்த ஒரு வேலையையும் செய்யலாம். எந்த நபர் எந்த வேலையை செய்கிறார் என்பதை பற்றியும், பதிவாகும்.

பிற நாடுகளிலும் டைம் பேங்க்

சுவிஸ் நாட்டின் உடல்நலத்துறை அமைச்சகத்தின் இந்த திட்டம், உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஸ்பெயின், கிரீஸ் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Lonely, Swiss banks

அடுத்த செய்தி