Home /News /international /

kinder Surprise: குடற்காய்ச்சல் நோய் பரவல், கிண்டர் மிட்டாய் தயாரிப்பை நிறுத்திய பெல்ஜியம்

kinder Surprise: குடற்காய்ச்சல் நோய் பரவல், கிண்டர் மிட்டாய் தயாரிப்பை நிறுத்திய பெல்ஜியம்

Kinder Joy chocolate: உள்நாட்டு விதிகளுக்கு பொருந்தவும், உட்பட்டும் புனேவில் உள்ள ஆலையில் கிண்டர் ஜாய் தயாரிக்கப்படுகிறது - கிண்டர் ஜாய் இந்தியா நிறுவனம்

Kinder Joy chocolate: உள்நாட்டு விதிகளுக்கு பொருந்தவும், உட்பட்டும் புனேவில் உள்ள ஆலையில் கிண்டர் ஜாய் தயாரிக்கப்படுகிறது - கிண்டர் ஜாய் இந்தியா நிறுவனம்

Kinder Joy chocolate: உள்நாட்டு விதிகளுக்கு பொருந்தவும், உட்பட்டும் புனேவில் உள்ள ஆலையில் கிண்டர் ஜாய் தயாரிக்கப்படுகிறது - கிண்டர் ஜாய் இந்தியா நிறுவனம்

    பெல்ஜியம் நாட்டில்  ஆர்லான் பகுதியில் செயல்பட்டு பெரோரா குழுமத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட கிண்டர் ரக மிட்டாய் பொருட்களை உடனடியாக திரும்பப் பெற அந்நாட்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் கிண்டர் சர்ப்ரைஸ் மிட்டாய்யை  உட்கொண்ட குழந்தைகள் குடற்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட பெரோரோ குழுமத்தின் மிட்டாய் தயாரிப்புகளை வாங்க வேண்டாம் என்று பெல்ஜியம் நாட்டின்  உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கப்பட்டது.  மேலும், தயாரிப்பு குறித்த முழுமையான தகவலை அளிக்கத் தவறியாதால், பெல்ஜியத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையை இழுத்து மூடவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    உள் உற்பத்தி குறைபாடு இருப்பதை உறுதி செய்த  பெரோரோ குழுமம், தனது தவறான செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டது. மேலும், வெளிநாட்டு சந்தைகளில் இருந்து கிண்டர் சர்பர்ஸ் மிட்டாய் தயாரிப்பை திரும்ப பெற்றுள்ள்ளது.

    இதுகுறித்து, கருத்து தெரிவித்த மிட்டாய் தயாரிப்பு நிறுவனம், " கிண்டர் சர்ப்ரைஸ் உட்கொண்ட குழந்தைகளுக்கு  குடற்காய்ச்சல் நோய் ஏற்பட்டு வருவதாக சில நாடுகளில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக, உள்ளூர் உணவு தரக்கட்டுப்பாடு  அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற இருக்கிறோம். எவ்வாறாயினும், சந்தையில் விற்பனை செய்யப்பட்ட  கிண்டர் மிட்டாய்களில்  குடற்காய்ச்சல் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா  இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும், நுகர்வோரையும், அவர்களுக்கான உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் சில முடிவுகளை தீவிரமாக எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் அநேக குழந்தைகளின் விருப்பமாகவும் இருந்து வரும், கிண்டர் மிட்டாய்களும் திரும்பப்பெறப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



    இதுதொடர்பான கேள்விக்கு விளக்கம் கொடுத்த துணை நிறுவனமான பெரோரா இந்தியா, "  பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை திரும்ப பெறுவதற்கான நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. உள்நாட்டு விதிகளுக்கு பொருந்தவும், உட்பட்டும் புனேவில் உள்ள ஆலையில் கிண்டர் ஜாய் தயாரிக்கப்படுகிறது. கிண்டர் ஜாய் மற்றும் கிண்டர் சர்பரைஸ் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. இந்தியாவில், தற்போது சந்தை விற்பனை பொருட்களை திரும்பப் பெற மாட்டோம்" என்று தெரிவித்துள்ளது. 

    இதற்கிடையே, இங்கிலாந்தில் கிண்டர்  சர்ப்ரைஸ் மிட்டாய் பொருட்களை திரும்பப் பெறப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தையில் இந்த மிட்டாயை வாங்க வேண்டாம், வாங்கிய பொருட்களை சாப்பிட வேண்டாம்" என்றும் எச்சரித்துள்ளனர்.

    ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளிலும் கிண்டர் சர்ப்ரைஸ் மிட்டாய் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

    குடற்காய்ச்சல்:  குடற்காய்ச்சல் பெரும்பாலான நோயாளிகளில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. வளர்ந்த நாடுகளில் குடற்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க ஆம்பிசிலின், குளோராம்ஃபெனிகோல், டிரைமீதோபிரிம்-சல்ஃபாமீதோக்ஸாசோல், அமோக்ஸிசைலின் மற்றும் சிப்ரோஃபுளோக்ஸாசின் போன்ற நுண்ணுயிர் எதிர் பொருள் மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகிறது. நுண்ணுயிர் எதிர் பொருள் மருந்துகளோடு ஏற்ற நேரத்தில் சிகிச்சை அளிப்பது நோயாளி இறப்பதற்கான விகிதத்தை சுமார் 1 சதவீதமாக குறைக்கிறது.

    சிகிச்சை அளிக்காமல் இருந்தால், குடற்காய்ச்சல் 3 வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரை இருக்கும். சிகிச்சை அளிக்கப்படாத நோயாளிகளில் 10 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரையானவர்களுக்கு மரணம் ஏற்படுகிறது. ஆயினும் சில சமுதாயங்களில் நோயாளி இறப்பு விகிதம் 47 சதவீதம் வரைக் கூட இருக்கலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Children, Food

    அடுத்த செய்தி