முகப்பு /செய்தி /உலகம் / இரண்டு நாட்களாக அமெரிக்கா ராணுவத் தளத்தின் மீது பறந்துகொண்டிருக்கும் சீன உளவு பலூன் !

இரண்டு நாட்களாக அமெரிக்கா ராணுவத் தளத்தின் மீது பறந்துகொண்டிருக்கும் சீன உளவு பலூன் !

 சீன உளவு பலூன்

சீன உளவு பலூன்

அமெரிக்க நிலத்தின் மீது உளவு பலூன்கள் பறப்பது இது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்க- ரஷ்ய பனிப்போர் நிகழ்ந்த போது இது போன்ற பல பலூன்கள் பறந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • chennai |

அமெரிக்காவின் உயர்மட்ட குழுவினர் பெய்ஜிங்கிற்கு பயணம் செல்லவுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டத்தை உண்டாக்கும் வகையில் அமெரிக்கா நிலப்பரப்பின் மீது சீனாவின் உளவு பார்க்கும் பலூன் பறந்து அமெரிக்க செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகம் பென்டகன் வியாழக்கிழமை கூறியுள்ளது.

கடந்த நவம்பரில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனியாக ஒரு சந்திப்பை மேற்கொண்டனர். அதன்பின் 2023 பிப்ரவரியில் அமெரிக்காவின் உயர்மட்ட குழு சீனாவிற்கு செல்ல உறுதி அளிக்கப்பட்டது. 2018க்குப் பிறகு அமெரிக்காவின் உயர்மட்ட குழு ஆசிய நாட்டிற்கு செய்யும் முதல் பயணமாக இது இருக்கும் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அது மட்டும் இல்லாமல் சமீப காலமாக அமெரிக்கா-சீனா இடையே தைவான் தொடர்பான மறைமுக மோதலும் நிலவி வருகிறது. வலுக்கட்டாயமாக  தைவானை சீன நிலப்பரப்போடு இணைக்க சீன அரசு முயற்சித்து வருகிறது. தைவான் தன்னைத் தற்காத்துக் கொள்ள பெரும் அளவிலான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கி வருகிறது. சீனா தாக்கினால், தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா உதவும் என்று அதிபர் பைடன் கூறியிருந்தார்.

இப்படி ஏற்கனவே பல சிக்கல்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் சீனாவிற்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு சீனாவில் உளவு பார்க்கும் பலூன் ஒன்று அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பறக்கவிடப்பட்டுள்ளது, இரு நாடுகளுக்கிடையே ஒரு பதற்ற சூழலை புதிதாக உருவாக்கத் தொடங்கியுள்ளது.

சாதாரண வணிக வகை விமானங்கள் 65000 அடி உயரம் வரை அதிகபட்சம் பறக்கும். ஆனால் சீனாவின் இந்த பலூன் 80000 அடி முதல் 120,000 அடி வரை பறந்து வருகிறது. இந்த பலூன் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் மொன்டானாவில் உள்ள விமான படை தளவாடத்தின் மீது பறந்து சென்றதாகவும், அங்கு உணர்திறன் வாய்ந்த அமெரிக்க விமான தளங்கள் மற்றும் நிலத்தடி குழிகளில் நாடு விட்டு நாடு பாயும் மூலோபாய அணுசக்தி ஏவுகணைகள் 150  அதிகமாக இருப்பதாகவும் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

ஆனால் இது குறிப்பாக ஆபத்தான உளவுத்துறை அச்சுறுத்தல் என்று பென்டகன் நம்பவில்லை என்றும் அந்த அதிகாரிகள்கூறுகின்றனர். அமெரிக்க நிலத்தின் மீது உளவு பலூன்கள் பறப்பது இது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்க- ரஷ்ய பனிப்போர் நிகழ்ந்த போது இது போன்ற பல பலூன்கள் பறந்தது. தற்போது, ​​இந்த பலூன் உளவுத்துறை சேகரிப்பு கண்ணோட்டத்தில் வரம்புக்குட்பட்ட சேர்க்கை மதிப்பைக் கொண்டுள்ளது என்று மதிப்பிடுகிறோம்.

இருப்பினும் வெளிநாட்டு உளவுத்துறை முக்கியத் தகவல்களை பெறாமல் இருக்க பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமெரிக்க நிலப்பரப்பில் நுழையும்முன் அலூடியன் தீவுகள் மற்றும் கனடா நிலப்பரப்பை இது உளவு பார்த்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த உளவு பலூனை சுட்டுத்தள்ளுவது தொடர்பாக பைடன் தலைமையில் ஒரு கூட்டம் நடந்தது.

அதிபர் ஜோ பைடன் வேண்டுகோளின் பேரில், பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் பலூனை கீழே சுடுவது குறித்து பரிசீலித்தனர். ஆனால் அவ்வாறு செய்வதால் ஏற்படும் சிதறல் பொருட்கள் தரையில் உள்ள பலருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று முடிவு செய்ததாக மூத்த பாதுகாப்பு அதிகாரி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். இருந்தாலும் அதன் மீதான கவனம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

First published: