ஆபாச இணையதளத்தில் காணாமல் போன மகளின் புகைப்படத்தை பார்த்த தாய்!

மாதிரிப்படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஓராண்டுகளுக்கும் மேலாக காணாமல் போன மகளின் புகைப்படத்தை ஆபாச இணையதளத்தில் பார்த்த தாய், போலீசில் புகாரளித்த நிலையில் விசாரணையை அடுத்து 30 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது இளம்பெண், ஓராண்டுக்கு முன்னதாக மாயமானார். அவர் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், பிரபல ஆபாச இணையதளம் ஒன்றில் மகளின் புகைப்படம், வீடியோக்கள் இருப்பதாக தாய்க்கு தகவல் கிடைத்துள்ளது.

  இதனை தாய் உறுதி செய்த நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இறங்கிய போலீசார், 15 வயது இளம்பெண்ணின் 60 வீடியோக்கள் பல ஆபாச தளங்களில் இருப்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து, இளம்பெண்ணுடன் வீடியோவில் இருக்கும் நபரை, கார் பதிவெண் மூலம் கண்டறிந்தனர்.

  கிறிஸ்டோபர் ஜான்சன் (Picture: AP)


  30 வயதான கிறிஸ்டோபர் ஜான்சன் என்பவர் வீடியோவில் அந்த பெண்ணுடன் இருப்பது உறுதியானது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளார் என்று போலீசார் கூறியுள்ளனர். வயது குறைந்தவர்களின் ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

  தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜான்சன் மறுத்துள்ள நிலையில், இளம்பெண்ணை விசாரணைக்கு உள்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

  Published by:Sankar
  First published: