ஹோம் /நியூஸ் /உலகம் /

3D பிரிண்டிங்கில் வளர்க்கப்பட்ட மூக்கு.. கேன்சர் நோயாளி முகத்தில் பொருத்திய பிரான்ஸ் மருத்துவர்கள் !

3D பிரிண்டிங்கில் வளர்க்கப்பட்ட மூக்கு.. கேன்சர் நோயாளி முகத்தில் பொருத்திய பிரான்ஸ் மருத்துவர்கள் !

3D மூக்கு

3D மூக்கு

முழுமையாக வளர்ச்சி மூக்கை செவ்வாய்க்கிழமை பெண்ணின் முகத்தில் பொருத்திய கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

3 டி பிரிண்டிங் முறை என்ற தொழில்நுட்பம் வந்த பின் அறிவியல் உலகமே புதிய புதிய சாதனைகளை செய்து வருகிறது. விளையாட்டு பொருட்களை 3டி பிரிண்டிங் தொடங்கி கட்டிடத்தை 3டி பிரிண்டிங் செய்ததுவரை பார்த்திருப்போம். பிரான்சில் ஒரு உறுப்பையே 3டி பிரிங்கிங் செய்து முயற்சித்துள்ளனர். 

துலூஸைச் சேர்ந்த பெண்மணி 2013 இல் நாசி குழி புற்றுநோய் காரணமாக ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை பெற்றுள்ளார். நோயால் அவரது மூக்கின் ஒரு பகுதியை இழந்துள்ளார். புனரமைப்பு முயற்சிகள் , தசை மாற்று சிகிச்சை எவ்வளவு செய்ய முயன்றும் முடியவில்லை. மூக்கு எனும் உறுப்பு இல்லாமல் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.

பின்னர், பிரான்ஸில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள், அவரது கையில் ஒரு மூக்கை 3 டி பிரிண்டிங் மூலம் வெற்றிகரமாக வளர்த்து, அதை அவரது முகத்தில் மாற்றிப் பொருத்தியுள்ளனர்.

புதிய மூக்கை உருவாக்க, குருத்தெலும்புக்கு பதிலாக உயிர் மூலப்பொருளால் 3D-அச்சிடப்பட்ட ஒரு தனிப்பயன் மூக்கு வடிவத்தை உருவாக்கி அவரது முன்கையில் பொருத்தியுள்ளனர். அதன் பிறகு மருத்துவர்கள் அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறிய தோல் பகுதியை எடுத்து பிரிண்ட் செய்யப்பட்ட மூக்குடன் இணைத்து இரண்டு மாதங்களுக்கு வளர்க்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகள் பேச்சு இல்லை..ஆனால் ஒரு இமெயில் மூலம் மீண்டும் இணைந்த காதல் தம்பதி

துலூஸ் யுனிவர்சிட்டி ஹாஸ்பிட்டல் (CHU), தனது ஃபேஸ்புக்கில் , முன்கையில் வளரும் மூக்கின் படங்களைப் பகிர்ந்துள்ளனர். முழுமையாக வளர்ச்சியான மூக்கை செவ்வாய்க்கிழமை பெண்ணின் முகத்தில் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

மருத்துவர்கள் மைக்ரோ சர்ஜரி மற்றும் கை தோலில் உள்ள இரத்த நாளங்களை பெண்ணின் முகத்தில் உள்ள இரத்த நாளங்களுடன் இணைத்து செய்துள்ளனர். ஸ்டெம்செல்களை பயன்படுத்தி, தசை மாற்று அறுவை செய்து வந்த மருத்துவ உலகிற்கு இது ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். 3டி முறையில் உருவாக்கப்பட்ட இந்த உயிரியல் பாகம் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் தான் உள்ளது.

இது வெற்றி பெற்றால் இது போன்று பாகங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட, எதிர்ப்பு காட்டும் உடம்புகளுக்கு அதற்கான பாகங்களை அதே உடம்பில் வரல செய்து மாற்று சிகிச்சை செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Cancer Treatments, France