ஹோம் /நியூஸ் /உலகம் /

கரண்ட் கட்.. டார்ச் வெளிச்சத்தில் சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்த டாக்டர்ஸ்!

கரண்ட் கட்.. டார்ச் வெளிச்சத்தில் சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்த டாக்டர்ஸ்!

டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை

டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை

இந்த வாரம் 14 வயது சிறுவனுக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |

ஒன்பது மாதங்களாக நடந்துவரும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பபில் தற்போது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் உக்ரேனிய தலைநகரையும் நாட்டின் பெரும்பகுதியையும் இருளில் மூழ்கடித்துள்ளது,

உக்ரைன் தலைநகர் கெய்வில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்  மருத்துவர்கள் டார்ச் வெளிச்சத்தில் ஒரு குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்தனர்.

அறுவை சிகிச்சையின் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இருட்டில் மூழ்கி கிடக்கும் நகரத்தில் குழந்தைக்கு நோயாளியை டார்ச்கள் மற்றும் ஹெட்லேம்ப்கள் பயன்படுத்தி காப்பாற்ற போராடும் மருத்துவர்களைக் காட்டுகிறது.

இதையும் பாருங்க : கத்தாரை கதிகலங்க வைக்கும் ஒட்டகக் காய்ச்சல்! உலகக்கோப்பை கால்பந்துக்கு அடுத்த சிக்கல்!

இந்த வாரம் 14 வயது சிறுவனுக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அதனால்  டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சையை முடிந்ததாகவும் நிகழ்வைப் படம்பிடித்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் போரிஸ் டோடுரோவ், கூறினார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து , க்ய்வ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் லைஃப் சப்போர்ட் மெஷின்களை இயக்க பேக்கப் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தியது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும் குழந்தை உயிர் பிழைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து "உக்ரைனின் தலைமைக்கு நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன, ரஷ்ய தரப்பின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிலைமையைத் தீர்க்க வாய்ப்பு உள்ளது. அதன்படி, பொதுமக்களின் அனைத்து துன்பங்களையும் முடிவுக்குக் கொண்டுவரும்," என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

First published:

Tags: Russia - Ukraine, Viral Video