Home /News /international /

நோயாளிகளின் கல்லீரலில் நூதனமாக ஆட்டோகிராஃப் பொறித்த மருத்துவர் - அதிர்ச்சித் தகவல்கள்

நோயாளிகளின் கல்லீரலில் நூதனமாக ஆட்டோகிராஃப் பொறித்த மருத்துவர் - அதிர்ச்சித் தகவல்கள்

Operation Theatre

Operation Theatre

argon beam machine எனப்படும் விஷேச இயந்திரத்தை பயன்படுத்தி தனது இனிஷியலை நோயாளிகளின் கல்லீரலில் பொறித்ததாகவும் இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.

    ஆபரேஷன் செய்த போது நோயாளிகளின் கல்லீரலில் மருத்துவர் ஒருவர் தனது இனிஷியலை ஆட்டோகிராஃப் செய்த சம்பவம் மருத்துவத் துறையினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

    மாணவர்கள் வகுப்புகளில் அமரும் போது மேஜைகளில் தங்களின் பெயரையோ அல்லது இனிஷியலையோ எழுதி அல்லது பொறித்து வைப்பதை பார்க்க முடியும். இது ஒருவிதமான பழக்க வழக்கம், ஆனால் இதையே மருத்துவர் ஒருவர் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார், இவர் ஆபரேஷன் செய்த போது நோயாளிகளின் உடல் உறுப்புகளில் விஷேச கருவியை பயன்படுத்தி தனது இனிஷியலை பொறித்திருக்கிறார். இது குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த மருத்துவரின் மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கிறது.

    இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையின் கல்லீரல் பிரிவில் 12 ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வந்தவர் பிரம்ஹால். இவருக்கு வயது 57.

    Also read:   Corona | இரும்பு பெட்டிகளில் அடைக்கப்படும் மக்கள்.. சீனாவில் கெடுபிடி - வீடியோ

    கடந்த 2013ம் ஆண்டு அதே மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு அறுவை சிசிச்சை செய்த மருத்துவர், அந்த நோயாளியின் கல்லீரலில் இனிஷியல் பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதனை போட்டோவாக எடுத்த அந்த மருத்துவர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார். அதே நோயாளிக்கு ஒரு வார காலத்திற்கு முன்பாக அறுவை சிகிச்சை செய்த பிரம்ஹால் தான் இந்த செயலில் ஈடுபட்டது பின்னர் தெரியவந்தது.

    இது போல மேலும் ஒரு நோயாளிக்கும் செய்திருப்பதாக ஒப்புக்கொண்ட மருத்துவர், argon beam machine எனப்படும் விஷேச இயந்திரத்தை பயன்படுத்தி தனது இனிஷியலை நோயாளிகளின் கல்லீரலில் பொறித்ததாகவும் இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார். மேலும் நீண்ட நேரம் நடக்கும் ஆபரேஷன்களின் போது மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    Also read:  கொரோனா பாதிப்பால் ஆண் உறுப்பின் அளவு சிறிதானது; விறைப்பு குறைபாடு - இளைஞர் பகீர் தகவல்

    இதனையடுத்து 2014ம் ஆண்டு தனது பதவியை மருத்துவர் பிரம்ஹால் ராஜினாமா செய்தார். இருப்பினும் அவர் மீது மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடுத்தது, இதனை விசாரித்து வந்த மருத்துவ தீர்ப்பாயம், கடந்த 2018ம் ஆண்டு பிரம்ஹாலை 5 மாதங்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இத்துடன் 10,000 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டது. இருப்பினும் இந்த தண்டனை போதாது என கருதிய மருத்துவ கவுன்சில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காலின்ஸ் ரைஸ், மருத்துவர் பிரம்ஹாலுக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதாது என கூறியதுடன் அவரின் மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தார். பிரம்ஹால் செய்த சம்பவத்தால் உடல் ரீதியான பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை, எனினும் ஒரு நோயாளி தான் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். பிரம்ஹாலின் செயல் மருத்துவத்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுப்பதாக உள்ளது. எனவே அவர் மருத்துவத்துறையில் இனியும் நீடிக்கக் கூடாது என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Arun
    First published:

    Tags: Doctor

    அடுத்த செய்தி