இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக முதன் முறையாக தமிழர் நியமனம்!

மாகாண சபை உருவாக்கப்பட்டது முதல் வடக்கு மாகாணத்திற்கு சிங்களவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

Web Desk | news18
Updated: January 20, 2019, 2:17 AM IST
இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக முதன் முறையாக தமிழர் நியமனம்!
புதிய ஆளுநர்களுடன் அதிபர் சிறிசேன
Web Desk | news18
Updated: January 20, 2019, 2:17 AM IST
இலங்கை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக இதுவரை சிங்களவர்களே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், முதன் முறையாக சுரேன் ராகவன் என்ற தமிழர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்குப்பகுதியில் 2007-ம் ஆண்டு மாகாண சபை உருவாக்கப்பட்டது. எனினும், 2013-ம் ஆண்டே முதன் முறையாக அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது வடக்கு மாகாண முதல்வராக விக்னேஷ்வரன் இருந்து வருகிறார்.

மாகாண சபை உருவாக்கப்பட்டது முதல் வடக்கு மாகாணத்திற்கு சிங்களவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், முதன் முறையாக தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் சிறிசேனவின் ஊடக இயக்குநராக இருந்த சுரேன் ராகவன் நேற்று வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும், மேற்கு, மத்தி, கிழக்கு மாகாணங்களுக்கும் ஆளுநர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர்.

கனடாவில் படித்த சுரேன் ராகவன் உள்நாட்டு யுத்தத்துக்குப் பிறகு வடக்கு மாகாண புரணமைப்பு பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

Also See..

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...