அறிவியல் ரீதியாக உலக அழகி ‘இவர்’தான்..!- சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு!

அழகை வர்ணிக்க பழங்கால கிரேக்கர்கள் பயன்படுத்திய விதிமுறை 'கோல்டன் விகிதம்’

அறிவியல் ரீதியாக உலக அழகி ‘இவர்’தான்..!- சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு!
பெல்லா ஹேடிட்
  • News18
  • Last Updated: October 16, 2019, 8:51 PM IST
  • Share this:
அறிவியல் ரீதியாக உலக அழகிக்கான அத்தனைத் தகுதிகளையும் பெற்றவர் பெல்லா ஹேடிட் என்னும் சூப்பர் மாடல்தான் என சர்வதேச விஞ்ஞானிகள் ஆமோதித்தக் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

அறிவியல் விஞ்ஞானிகள் ”Golden Ratio of Beauty Phi Standards" என்ற கிரேக்க கணித விதிமுறையை அடிப்படையாகக் கொண்ட உலகின் மிகவும் அழகான பெண் யார் என்பதைக் கண்டறிந்துள்ளனர். அழகை வர்ணிக்க பழங்கால கிரேக்கர்கள் பயன்படுத்திய விதிமுறையை இன்றைய நடைமுறைக்கு ஏற்ப பயன்படுத்தி விஞ்ஞானிகள் பெல்லா ஹேடிட் என்னும் மாடல் அழகி ஒருவரை அறிவியல் ரீதியிலான உலக அழகி என்றுத் தேர்வு செய்துள்ளனர்.

கோல்டன் விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க மாடல் அழகி பெல்லா ஹேடிட் 94.35 சதவிகிதம் பொருந்தி உள்ளார். இவரின் வயது 23 ஆகும். இரண்டாம் இடத்தில் கிரேக்க அறிவியல் விதிமுறை பாப் பாடகி பியான்சேவுக்கு 92.44 சதவிகிதம் பொருந்தி உள்ளதாம். அமெரிக்க நடிகை ஆம்பெர் ஹெர்ட் மூன்றாம் இடத்தில் உள்ளார்.


கோல்டன் விகித முறையை லண்டனின் மிகப் பிரபலமான முக ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் ஜூலியன் டி சில்வா என்ற மருத்துவர் சோதித்துப் பார்த்துள்ளார். அத்தனைத் தகுதிகளும் கொண்ட பெண் ஆக பெல்லா ஹேடிட் தேர்வு பெற்றுள்ளார்.

மேலும் பார்க்க: அசத்தல் அம்சங்களுடன் வெளியானது ரெட்மி நோட் 8, நோட் 8 ப்ரோ..!

கம்ப்யூட்டர், மொபைல் - ஹேக்கிங்கைத் தடுப்பது எப்படி
First published: October 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்