சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்று வெடித்து சிதறி வருவதை கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், இதனால் மனித இனத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறிந்துள்ளனர்.
8 பெரிய மற்றும் சிறிய கோள்கள், நட்சத்திரங்கள் நிறைந்தது தான் நம்முடைய சூரியக் குடும்பம். நம் சூரியக் குடும்பம் போன்ற பல கிரக அமைப்புக்கள் பால் வீதியில் நிறைந்துள்ளன. பால் வீதியில் உள்ள சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்று வெடித்து சிதறிய வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். EK Draconis என பெயரிடப்பட்டுள்ள அந்த பெரிய நட்சத்திரம் அளவில் நம் சூரியனை போன்றதாக உள்ளது. சூரியனில் நடைபெறும் வெடிப்புக்கள் போல இந்த நட்சத்திரத்திலும் பெரும் வெடிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நட்சத்திரத்தை பூமியில் இருந்தும் விண்வெளியில் இருந்தும் தொலைநோக்கிகள் மூலம் ஆராய்ந்து வருகின்றனர்.
ஜப்பானின் Colorado Boulder பல்கலைக்கழத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், EK Draconis நட்சத்திரம் குறித்த ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வரும் நிலயில் மிக ஆபத்தான முடிவுகளை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
Also read: சத்தமாக பாடல்கள் கேட்ட பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த நபர்
coronal mass ejection எனப்படும் வெடிப்பு நிகழ்வு இந்த EK Draconis நட்சத்திரத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்து வருகிறது. இந்த நிகழ்வானது சூரியனில் நிகழக்கூடியதாகும். அதே நேரத்தில் இந்த பெரு வெடிப்பினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. பால் வீதியில் காலநிலை மாற்றம், இதிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மணிக்கு மில்லியன் கணக்கிலான கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து பிற நட்சத்திரங்கள், கோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அப்படி நடந்தால் பூமியில் பல்வேறு பாதிப்புகளும், மனித இனத்துக்கு பெரும் ஆபத்தும் ஏற்படக் கூடும். பூமியை சுற்றி வரும் என்னற்ற செயற்கைகோள்கள் கருகிவிடக்கூடும், அதனால் பூமியில் தொலைத்தொடர்பு, மின்சார சப்ளை நிறுத்தம், ரேடியேஷன் என பெரும் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
இதன் மூலம் சூரியனிலும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்பதே விஞ்ஞானிகளின் கவலையாக உள்ளது. ஆனால் சூரியனை ஒப்பிடுகையில் EK Draconis மிகவும் வயது குறைந்த கோள் ஆகும். EK Draconis தோன்றி 100 மில்லியன் ஆண்டுகள் அளவில் மட்டுமே இருக்கக் கூடும், சூரியனின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகும். விஞ்ஞானிகள் தொடர்ந்து இது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.