பாகிஸ்தான் பெஷாவரில் நடைபெற்ற மனித குண்டுவெடிப்பு சம்பவத்தில் 25க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் பெஷாவர் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இது தொடர்பாக காவல்துறையினர் அளித்த தகவலின் படி, அது தற்கொலை படை தாக்குதல் எனவும் அதில் குறைந்தபட்சம் 28 பேர் உயிரிழந்துள்ளனர், 120க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம், மாலை தொழுகை வேலையில் நடைபெற்றது. இதுவரை எந்த தீவிரவாத குழுவும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதில், பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரிப் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு இதற்கும் இஸ்லாம் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். இது குறித்து ட்வீட் செய்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், "தொழுகை வேலையில் மசூதியில் நடைபெற்ற இந்த தீவிரவாத தற்கொலை படை தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டார்.
மேலும் இதேபோல் 2022ஆம் ஆண்டும் பெஷாவர் நகரில் உள்ள ஷியா மசூதியில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bomb, Bomb blast, Pakistan News in Tamil