சீனாவில் இருந்து மலேசியா வழியாக நெதர்லாந்து நாட்டுக்கு சென்று கொண்டிருந்த எவர் கிவன் சரக்கு கப்பல், கடந்த 23ஆம் தேதி எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நின்றது. 1300 அடி நீளமும், 2 லட்சத்து 20 ஆயிரம் டன் எடையும் கொண்ட கப்பல், கால்வாயின் குறுக்கே நின்றுவிட்டதால், அந்த வழியில் செல்லமுடியாமல் 320 கப்பல்கள் நடுக்கடலில் தத்தளித்து நிற்கின்றன.
இதையடுத்து, சூயஸ் கால்வாயின் பக்கவாட்டில் மண் தோண்டப்பட்டு, 10க்கும் மேற்பட்ட இழுவைப் படகுகள் மூலம், கப்பலை மிதக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அதில் 30 டிகிரி அளவுக்கு இருபுறமும் அசையக்கூடிய நிலைக்கு கப்பல் நகர்ந்ததால், விரைவில் மீட்கப்படும் என்று அங்குள்ளவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபதா அல் சிசி, கப்பலில் வைக்கப்பட்டிருக்கும் சரக்குகளை அகற்றிவிட்டு, தரைதட்டிய கப்பலை மிதக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
சூயஸ் கால்வாய் என்றால் என்ன? அது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?
ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக சூயஸ் கால்வாய் உள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட 193 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய் உலகின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றாகும்.
இது 1869ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றிச் செல்ல வேண்டியதை தவிர்த்து பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயண தூரத்தை குறைக்கும் சர்வதேச வர்த்தகத்தில் அதிலும் குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில் இந்த சூயஸ் கால்வாயின் பங்கு மிக முக்கியமானது. இந்த கால்வாய் எகிப்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1956ம் ஆண்டில் இஸ்ரேல், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் சூயஸ் கால்வாயின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் முனைப்புடன் எகிப்தை ஆக்கிரமிக்க முயன்றன. பின்னர் அம்முயற்சியை கைவிட்டனர்.
சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கியது எப்படி?
சரக்கு கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதை தவிர்க்கும் பொருட்டு சூயஸ் கால்வாயின் குறுகிய பரப்பை ஒவ்வொன்றாகவே கடந்து செல்கின்றன. 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான இந்த எவர்கிவ்வன் சரக்கு கப்பல் அன்று மணல் புயல் ஏற்பட்டதால் அதில் சிக்கி நிலை மாறியதாக கூறப்படுகிறது.
இந்த கால்வாயில் கடக்க தேவையான அதிகபட்ச அளவில் எவர்கிவ்வன் கப்பல் இருந்துள்ளது. தைவான் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் ஜப்பானியருக்கு சொந்தமான இக்கப்பலின் பணிபுரிந்து வரும் 25 சிப்பந்திகளுமே இந்தியர்கள். அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Egypt