• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சூடானில் ராணுவத்துக்கு எதிராக தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம்!

சூடானில் ராணுவத்துக்கு எதிராக தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம்!

சூடான்

சூடான்

சூடானில் ராணுவ ஆட்சியை ஏற்க மறுத்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் வரை பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

  • Share this:
    சூடானில் ஜனநாயக ஆட்சி கலைக்கப்பட்டு ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதை எதிர்த்து  மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  அரசு எண்ணெய் நிறுவன ஊழியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரும் ராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடு சூடான். 1956- ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற சூடான், பல ராணுவப் புரட்சிகளை சந்தித்துள்ளது. தற்போதைய பிரதமாக அப்துல்லா ஹம்டோ இருந்து வந்தார். இந்நிலையில், அவரது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    அரசியல் கட்சிகள் இடையே நிலவும் மோதல்கள் காரணமாக ஜனநாயக ஆட்சி கலைக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சூடானின் ஆயுதப் படைத் தலைவரும் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் உள்ளவருமான  ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான், நாட்டில் 'உள்நாட்டுப் போரை' தடுக்கவே ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக கூறியுள்ளார்.  புர்ஹானின் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரதமர் அப்தல்லா ஹம்டோக் செவ்வாய்க்கிழமை  வீடு திரும்பினார். அவரது வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ராணுவ ஆட்சியை ஏற்க மறுத்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் வரை பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். எனினும், ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: மனைவி கொடுமை தாங்கல.. ப்ளீஸ் என்னய ஜெயிலுக்கு அனுப்பிருங்க - போலீசுக்கு கணவர் நூதன கோரிக்கை


    மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக அரசு எண்ணெய் நிறுவன ஊழியர்கள், தாங்களும் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். இதேபோல், மருத்துவர்களும்  ஒத்துழையாமை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    மேலும் படிக்க: ஹோம்வோர்க், டியூசன்... குழந்தைகளுக்கு அழுத்தம் கூடாது: சீனா புதிய சட்டம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: