Home /News /international /

சூடான் நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து... 38 பேர் உயிரிழப்பு

சூடான் நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து... 38 பேர் உயிரிழப்பு

பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் தங்க சுரங்க பணிகள், சூடானின் 75 சதவீத தங்கத்திற்கான தேவையை பூர்த்தி செய்கின்றன. ஆண்டுக்கு 93 டன் அளவுக்கு சூடானில் தங்கம் தோண்டி எடுக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சூடான் நாட்டில் மேற்கு கொர்டாபோன் மாகாணத்தில் தங்க சுரங்கங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. நிலக்கரி சுரங்கங்களை விட, தங்க சுரங்கத்தில் பணியாற்றுவது அதிக கடினமான காரியம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கையாண்டு, சுரங்கத்தில் பணிகள் நடைபெற்று வரும்.

    சூடானின் முக்கிய நகரமான கார்டோமில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புஜா என்ற கிராமத்தில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று திடீரென விபத்து ஏற்பட்டு, இடிந்து விழுந்தது.

    இதில் சிக்கிக் கொண்ட பணியாளர்கள் அபயக்குரல் எழுப்பினார்கள். மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Also Read : 3000 ஆண்டு பழமையான மம்மி உடலுக்கு உருவம்! தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அராய்ச்சியாளர்கள் முயற்சி

    விபத்து ஏற்பட்ட சுரங்கத்தில் சில காலமாக பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யாமல் தொழிலாளர்கள் சுரங்கத்தில் இறங்கியதால்தான் இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Also Read : Omicron| டெல்டாவையும் மிஞ்சி விட்டது ஓமைக்ரான், பாதிப்பு கடுமையாக இருக்கும்- டாக்டர் ஃபாசி எச்சரிக்கை

    சூடானை பொருத்தளவில் சுமார் 20 லட்சம் தொழிலாளர்கள் சுரங்கத் தொழில்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக செங்கடல், நஹ்ர் அல் நீல், தெற்கு கொர்டாபன், மேற்கு, வடக்கு கொர்டாபன் ஆகிய மாகாணங்களில் சுரங்கங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்படுகின்றன. பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் தங்க சுரங்க பணிகள், சூடானின் 75 சதவீத தங்கத்திற்கான தேவையை பூர்த்தி செய்கின்றன. ஆண்டுக்கு 93 டன் அளவுக்கு சூடானில் தங்கம் தோண்டி எடுக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    Also Read : டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Gold, Minerals

    அடுத்த செய்தி