• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சூடானில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல்: ஜனநாயக ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு

சூடானில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல்: ஜனநாயக ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு

சூடானில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல்: ஜனநாயக ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு

சூடானில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல்: ஜனநாயக ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு

சூடானில், அரசியல் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், ஜனநாயக ஆட்சி கலைக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    பிரதமர் அப்துல்லா ஹம்டோ உள்ளிட்ட பலர் சிறைபிடிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பியன் யூனியன் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடு சூடான். 1956- ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற சூடான், பல ராணுவப் புரட்சிகளை சந்தித்துள்ளது. 1989 முதல் 2019 வரை சூடானின் அதிபராக இருந்த ஒமர் அல்-பஷீரின் பதவியும் ராணுவ கிளர்ச்சியின் மூலமே பறிக்கப்பட்டது. அல்-பஷீரின் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி அரசு ஆட்சியமைத்தது. அப்போது அப்துல்லா ஹம்டோ பிரதமராக நியமிக்கப்பட்டார்.

    தற்போது அவரும் ரணுவத்தினரால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சிலரை ராணுவ கூட்டுப்படையினர் கைதுசெய்துள்ளதாகவும் அவர்கள் வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த தகவல்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி ஜனநாயகத்திற்கு ஆதரவான அமைப்பினர் தலைநகர் கார்டூமில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

    சூடான் முழுவதிலும் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தலைநகர் கார்டூமில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அங்கு அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    ராணுவத்தினரால் ஆட்சியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கவலைக்குரியது என பிரிட்டன் தூதர் ராபர்ட் ஃபர்வெதர் கூறியுள்ளார்.

    சூடான் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, அரபு நாடுகள் உள்ளிட்டவையும் கவலை தெரிவித்துள்ளன. அப்துல்லா ஹம்டோ அரசு, மேற்கத்திய நாடுகளுடன் சுமூக உறவை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றது. தற்போதைய ராணுவ புரட்சி அதற்கு பாதகத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: