Home /News /international /

சாண்ட்விச்சில் மயோனீஸ் அதிகமாக இருந்ததால் ஊழியரை சுட்டுக்கொன்ற நபர்..

சாண்ட்விச்சில் மயோனீஸ் அதிகமாக இருந்ததால் ஊழியரை சுட்டுக்கொன்ற நபர்..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Subway Worker killed: சாண்ட்விச்சில் மயோனீஸ் அதிகமாக இருந்தது தொடர்பாக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஊழியர்களை நோக்கி சுட தொடங்கியுள்ளார்.

    சாண்ட்விச்சில் மயோனீஸ் அதிகமாக இருந்ததால் உணவக ஊழியரை சுட்டுக்கொன்ற நபரின் செயல் ஜோர்ஜியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜோர்ஜியா நாட்டின் அட்லாண்டா பகுதியில் செயல்பட்டுவரும் சப்வே உணவகத்துக்கு 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சென்றுள்ளார். சாண்ட்வீச் ஆர்டர் செய்து அந்த நபர் காத்திருந்துள்ளார். தனக்கான சாண்ட்வீச் பரிமாறப்பட்டபோது அதில் மயோனீஸ் அதிகமாக இருப்பதால் அவர் ஆத்திரமடைந்துள்ளார்.

    இது தொடர்பாக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஊழியர்களை நோக்கி சுட தொடங்கியுள்ளார். இதில், Brittany Macon என்ற ஊழியர் உயிரிழந்தார். மற்றொரு ஊழியர் காயமடைந்தார். காயமடைந்த ஊழியரின் 5 வயது மகன் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றபோது அங்கு இருந்துள்ளார். தற்போது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை அட்லாண்டா போலீசார் கைது செய்தனர். எனினும் அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை. அந்த நபர் இந்த உணவகத்துக்கு இதற்கு முன்பும் பலமுறை வந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: இலங்கையில் தீர்ந்துவிட்ட எரிபொருள்… ஜூலை 10 வரை அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கும்


    இந்த சம்பவம் குறித்து உரையாற்றிய சப்வே உணவகத்தின் இணை உரிமையாளர் வில்லி க்ளென், 24 வயதான ஜடா தனது மகன் காயமடையாமல்  இருக்க தள்ளிவிட்டதால் இரண்டு முறை சுடப்பட்டார். சாண்ட்வீச்சில் மயோனீஸ் அதிகமாக இருந்தது என்பதால்  ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது என்பது என் மனதை காயப்படுத்துகிறது’ என வேதனையுடன் குறிப்பிட்டார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Gun shoot

    அடுத்த செய்தி