ஒரு மனிதனின் ஆயுட்காலம் என்பது அவனுடைய ஆரோக்கியமான வாழ்க்கை சூழலும், அவனது வாழும் முறையையும் அடிப்படையாக கொண்டதே. அதுபோன்ற சூழலை கொண்ட பகுதிகளில் வசிப்போர் முதுமையை கடந்தும் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். உலகில் இப்போது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் என்கிறது ஆய்வு முடிவு. ஆனால் இந்த நிலை உலகின் எல்லா நாடுகளிலும் ஒரே போன்று இல்லை.
பெருந்தொற்று மற்றும் உலகப் போர்களை விட்டுவிட்டால், இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் மனிதனின் சராசரி வயது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதிய மருத்துவ கட்டமைப்பு , தூய்மை மற்றும் உணவு ஆகியவை நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகினறன.
உலக அளவில் நீண்ட ஆயுளை கொண்ட மக்கள் வசிக்கும் நான்கு இடங்களின் பட்டியலும் வெளியாகி ஆச்சயர்த்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் மனிதர்களின் சராசரி வயது 77 ஆக அதிகரிக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் மொனாக்கோவில் மனிதர்களின் சராசரி வயது 87 ஆக இருக்கும் போது, ஆப்பிரிக்காவின் ஏழை நாடான சாட் குடியரசின் சராசரி வயது 53 ஆண்டுகள் மட்டுமே உள்ளது.
இந்தப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனாவின் ஹாங்காங்கும், மக்காவ் மூன்றாவது இடத்திலும், ஜப்பான் நான்காவது இடத்திலும் உள்ளன. உலக வல்லரசுகளில் ஜப்பானில் மட்டுமே மனிதர்களின் சராசரி வயது அதிகமாக உள்ளது. தெற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவாவில், மக்கள் 90 வயது வரை சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.
சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் நல்ல உணவு முறையால் மட்டுமே நீண்ட ஆயுளை அடைய முடியாது என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். இதற்கு, ஒரு மனிதனின் 'ஸ்மார்ட் முடிவுகள்' என்பவை முக்கியப் பங்காற்றுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சமச்சீர் உணவு, போதுமான தூக்கம், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை நீண்ட ஆயுளுக்கான மரபணு காரணிகள்..
நீண்ட ஆயுளை கொண்ட மக்கள் உணவை வயிறு புடைக்க உண்பதில்லை. வயிற்றின் திறனில் 80 சதவிகிதம் மட்டுமே உண்கிறார்கள். சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வதோடு, ஏராளமான காய்கறிகள் மற்றும் பழங்களையும் உண்கின்றனர். குறைந்த அளவு மது எடுத்துக்கொள்கிறார்கள். நீண்ட மற்றும் சிறந்த வாழ்க்கையை விரும்பும் அனைவருக்குமே இந்த பழக்க வழக்கங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்து. ஒரு நபரின் நீண்ட ஆயுளில் மரபணுக்கள் மற்றும் வாழ்க்கை முறை எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த ஆய்வு முடிவுகள் தக்க சான்றாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy Life