ஹோம் /நியூஸ் /உலகம் /

செவ்வாய் கிரகத்தையும் விட்டுவைக்காத மனிதன்! 7,000 கிலோ குப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வில் தகவல்!

செவ்வாய் கிரகத்தையும் விட்டுவைக்காத மனிதன்! 7,000 கிலோ குப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வில் தகவல்!

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சிதறிய பொருட்கள், வரவிருக்கும் செவ்வாய் பயணங்களை பாதிக்கலாம் என்று ஆய்வாளர் எச்சரிக்கிறார்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சிதறிய பொருட்கள், வரவிருக்கும் செவ்வாய் பயணங்களை பாதிக்கலாம் என்று ஆய்வாளர் எச்சரிக்கிறார்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சிதறிய பொருட்கள், வரவிருக்கும் செவ்வாய் பயணங்களை பாதிக்கலாம் என்று ஆய்வாளர் எச்சரிக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • international, IndiaUSUS

  செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை சுற்றிவரும் பல விண்கலங்கள், தற்செயலாக ஒவ்வொன்றும் குப்பைத் துண்டுகளை விட்டுச் செல்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

  மனிதகுலத்திற்கும் செவ்வாய் கிரகத்திற்கும் எப்போதும் ஒரு தொடர்பு உள்ளது. ஆய்வாளர்கள் கூற்றுப்படி, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் செவ்வாய் கிரகத்தை ஆராயத் தொடங்கினர். மேலும், 2030களில், நாசா முதல் முறையாக ஒரு மனித பயணத்தை அங்கு அனுப்ப ஆயத்தமாகி வருகிறது.

  செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் காலடி எடுத்து வைப்பது இன்னும் வெகு தொலைவில் இருந்தாலும், இந்த ‘சிவப்புக் கோளில்’ குப்பைகளைக் குவித்து பூமியைப் போல் மாற்றும் முயற்சியில் நாம் இறங்கியிருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.

  மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் ரோபோட்டிக்ஸில் முதுகலை ஆராய்ச்சியாளரான காக்ரி கிலிக் என்பவரின் கருத்துப்படி, ‘மனிதர்களின் சாகச ரோபோ ஆய்வுகள் ஏற்கனவே 7118.6 கிலோ கழிவுகளை செவ்வாய் கிரகத்தில் விட்டுவிட்டன,’ என்றார்.

  ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளி விவகாரங்களுக்கான அலுவலகம் அளித்த தகவலின்படி, பல்வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்திற்கு 14 வெவ்வேறு பயணங்களில் மனிதனால் உருவாக்கப்பட்ட 18 விண்கலங்களை அனுப்பியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

  2022 ஆகஸ்ட் நடுப்பகுதியில் நாசா, பெர்ஸிவெரன்ஸ் மார்ஸ் ரோவர் (Perseverance Mars rover) மூலம் தரையிறங்கிய பின் வீசப்பட்ட குப்பைத் துண்டைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது. செவ்வாய் கிரகத்தில் குப்பைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பது இது முதல்முறை அல்ல. அங்கு கணிசமான அளவு குப்பைகள் குவிந்துள்ளன என்பது அறியப்பட்ட ஒன்றாகும்.

  மேலும் அவர் கூறுகையில், ‘செவ்வாய் கிரகத்தில் உள்ள குப்பைகள் இரண்டு முக்கிய ஆதாரங்களில் இருந்து வருகின்றன: செயலற்ற விண்கலம் மற்றும் செயலிழந்த விண்கலம். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் செல்லும் ஒவ்வொரு விண்கலத்தையும் பாதுகாக்க ஒரு செயல் கருவி தேவைப்படுகிறது. அந்த செயல் கருவியில் ஒரு வெப்பக் கவசமும் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது கிரகத்தின் வளிமண்டலத்தில் அவை முறையாக தரையிறங்க வழிவகுக்கும்’ என்று கிலிக் கூறினார்.

  அங்கு இருக்கும் ஒவ்வொரு குப்பையின் மற்றொரு பெரிய ஆதாரம், அழிக்கப்பட்ட விண்கலத்தின் துண்டுகள் ஆகும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.கிலிக்கின் கூற்றுப்படி, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சிதறிய பொருட்கள், வரவிருக்கும் செவ்வாய் பயணங்களை பாதிக்கலாம் என்று எச்சரிக்கிறார்.

  Published by:Archana R
  First published:

  Tags: MARS, NASA