சீன விஞ்ஞானிகள்தான் கொரோனாவை உருவாக்கினர்: வெளியான புதிய ஆதாரம்!

மாதிரிப் புகைப்படம்

வௌவால்களில்டம் இருந்து கொரோனா வைரஸை எடுத்து அதனுடன் சிலவற்றை கலந்து ஆபத்தான கொரோனா  SARS-CoV-2 வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த வைரஸ் வௌவால்களிடம் இருந்து இயற்கையாக பரவியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சீன விஞ்ஞானிகள் முயன்றுள்ளனர்.

 • Share this:
  கொரோனா வைரஸை சீன விஞ்ஞானிகள் தான் உருவாக்கியுள்ளதாக புதிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

  சீனாவின் வூகான் மாகாணத்தில்  முதன்முதலில்  கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனிதக் குலத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில்,  இந்த வைரஸின் தொடக்கம் குறித்து கண்டறிய தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர்.

  சீனாதான் திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கொரோனா தொற்று குறித்து சீனா அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே, ஊகான் நகர வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் மருத்துவ உதவியை நாடியதாக அமெரிக்க உளவுத்துறை அண்மையில் கூறியது.

  கொரோனா வைரஸ் தீவிரமடைவதற்கு முன்பே  2015ல் சீன விஞ்ஞானிகள் இது போன்ற வைரஸ் எனும் உயிரி ஆயுதத்தை உருவாக்குவது பற்றி விவாதித்ததாக தகவல் வெளியானது.

  இந்நிலையில், பிரிட்டிஷ் பேராசிரியர் அங்கஸ் டால்க்லிஷ் மற்றும் நார்வே விஞ்ஞானி டாக்டர் பிர்கர் சோரன்சென் ஆகியோர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வைத்து டெய்லி மெயில் ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில், வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியின்  உயிர் பாதுகாப்பு நிலை -4  ஆய்வகத்தில் கொரோனா  SARS-CoV-2 வைரஸை சீன விஞ்ஞானிகள் தயார் செய்துள்ளனர் என்றும் நம்பகமான இயற்கை மூதரையர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

  வௌவால்களில்டம் இருந்து கொரோனா வைரஸை எடுத்து அதனுடன் சிலவற்றை கலந்து ஆபத்தான கொரோனா  SARS-CoV-2 வைரஸை அவர்கள் உருவாக்கியுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.  இந்த வைரஸ் வௌவால்களிடம் இருந்து இயற்கையாக பரவியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: