ஹோம் /நியூஸ் /உலகம் /

விண்வெளி ஆய்வகத்திலிருந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு.. சீனா புதிய மைல்கல்

விண்வெளி ஆய்வகத்திலிருந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு.. சீனா புதிய மைல்கல்

விண்வெளி ஆய்வகத்திலிருந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு

விண்வெளி ஆய்வகத்திலிருந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு

சீனாவின் Shenzhou 13 விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக விண்வெளி ஆய்வகத்திலிருந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டது. சீனாவின் Shenzhou 13 விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தினர்.

  Shenzhou 13 என்பது சீனா தயாரித்துள்ள ஒரு விண்கலம் ஆகும். அதில் உள்ள விண்வெளி வீரர்களான ஜாய் ஜிகாங், வாங் யாப்பிங் மற்றும் யே குவாங்ஃபு ஆகியோர் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர். டியாங்காங் நிலையத்தின் மையப்பகுதியான தியான்ஹேவிலிருந்து விண்வெளி வீரர்கள் ஆன்லைனில் தோன்றி பாடம் நடத்தினர்.

  சீனாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான வாங் யாப்பிங், Shenzhou விண்கலத்தில் உள்ள மூன்று தனித்தனி படுக்கையறைகளையும், தியான்ஹேவின் முக்கிய பகுதிகளையும் மாணவர்களுக்கு காண்பித்தார். விண்வெளியில் தண்ணீரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதையும், தனது மகள் செய்த காகித பூ எப்படி மலரும் என்பதையும் செய்முறை மூலமாக விளக்கினார்.

  Also read  : அரசு பணியாளர்களுக்கு வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை... வருகிறது புதிய சட்டம்

  பின்னர் வாங், நீர் படலத்தில் அதிக தண்ணீரை ஊற்றி வட்ட வடிவ நீர் குமிழி பந்தை உருவாக்கினார். Shenzhou 13 விண்கலத்தின் கமாண்டர் ஜாய் ஜிகாங். விண்வெளியில் அணியக் கூடிய உடை குறித்து விளக்கினார். புவி ஈர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் தரைச் சிதைவு ஏற்படாமலிருக்கும் வகையில் அந்த உடை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜிகாங் விளக்கினார்.

  சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியத்தில் இருந்தபடி ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்வெளி வகுப்பில் பங்கேற்றனர். மேலும் சிச்சுவான், ஹாங்காங், மக்காவ் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் விண்வெளி வகுப்பில் கலந்துக்கொண்டனர்.

  விண்வெளியில் எப்படி உறங்குவீர்கள்? பறக்கும் தட்டுக்களை பார்த்துள்ளீர்களா? என பல்வேறு கேள்விளை மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டு பதில் பெற்றனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: China, Online class