சோதனை அதிகாரியாக பொய் சொல்லி கேஎப்சி-யில் ஓராண்டாக காசு கொடுக்காமல் சாப்பிட்ட மாணவன்

எப்போதும் லிமோ காரில் நல்ல உடையில் வந்து இறங்கும் அந்த மாணவன் ‘கேஎப்சி தலைமை அலுவலகம்’ என்று குறிப்பிடப்பட்ட ஒரு ஐ.டி கார்டையும் வைத்திருந்துள்ளான்.

Web Desk | news18
Updated: May 15, 2019, 9:51 PM IST
சோதனை அதிகாரியாக பொய் சொல்லி கேஎப்சி-யில் ஓராண்டாக காசு கொடுக்காமல் சாப்பிட்ட மாணவன்
கேஎப்சி
Web Desk | news18
Updated: May 15, 2019, 9:51 PM IST
மாணவன் ஒருவன் தன்னை உணவு சோதனை அதிகாரி எனப் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு கேஎப்சி உணவகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இலவசமாகவே சாப்பிட்டுள்ளான்.

தென் ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஒருவன் கேஎப்சி தலைமை அலுவலகத்தில் இருந்து வருவதாக கேஎப்சி உணவகம் ஒன்றில் தெரிவித்துள்ளான். உணவு தரத்தை சோதிப்பதாக தினமும் தனக்கு வேண்டிய நேரம் எல்லாம் வந்து சாப்பிட்டுள்ளான்.

எப்போதும் லிமோ காரில் நல்ல உடையில் வந்து இறங்கும் அந்த மாணவன் ‘கேஎப்சி தலைமை அலுவலகம்’ என்று குறிப்பிடப்பட்ட ஒரு ஐ.டி கார்டையும் வைத்திருந்துள்ளான். இது ஒரு கடையில் மட்டுமல்லாது பல கேஎப்சி கிளைகளிலும் இம்முறையையே பின்பற்றியுள்ளான் அந்த மாணவன்.


இதனால், பக்கத்துக் கிளைகளிலும் சோதனை குறித்து விசாரித்தால் அனைவரும் இம்மானவனை நன்கு அறிந்தவனாகக் கூற யாருக்குமே சந்தேகமே வரவில்லை. ஓர் ஆண்டுக்கும் மேலாக போலியாக சோதனை என்ற பெயரில் இலவசமாகவே உணவருந்திய அந்த மாணவனை தற்போது போலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் பார்க்க: காங்கிரசில் இணைய விருப்பம் தெரிவித்த தமிழிசை -செல்வப்பெருந்தகை
First published: May 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...