இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின் பலு நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 4300 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: April 12, 2019, 9:01 PM IST
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் உடைந்து கிடைக்கும் கட்டடங்கள்.(Image: Reuters)
Web Desk | news18
Updated: April 12, 2019, 9:01 PM IST
இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி தீவின் கிழக்கு கடற்கரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தோனேஷியாவின் மொரோவலி மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுகத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இல்லை.


கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின் பலு நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 4300 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Also watch

First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...