ஹோம் /நியூஸ் /உலகம் /

ஈரானில் பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா..கேட்டாலே பதற வைக்கும் விதிமுறைகள்!

ஈரானில் பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா..கேட்டாலே பதற வைக்கும் விதிமுறைகள்!


ஈரானில் பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா

ஈரானில் பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா

ஈரானில் கட்டாய ஹிஜாபுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
  • intern, IndiaIranIranIranIranIranIranIranIran

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விஷயத்திற்கும் சட்டம், விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. இது நாட்டிற்கு நாடு வேறுபடும் உதாரணமாக வண்டி ஓட்டுவதற்கான உரிமம் பெறுவது 18 வயது என்று பெரும்பாலான நாடுகளில் இருக்கிறது. இதில் பாலின அடிப்படையில் கூட ஒரு சில நாடுகளில் பெண்களுக்கு பல தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.  அந்த வகையில்,  இப்படி கூடவா இருக்கிறது என்று ஈரான் நாட்டில் பெண்கள் இந்த விஷயங்கள் எதுவும் செய்யக்கூடாது என்று மிகப்பெரிய பட்டியலே இருக்கிறது. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இரானிய பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கான மிகப் பெரிய ஒரு கட்டுப்பாடு என்பது எங்கு சென்றாலும் ஹிஜாப் அணிய வேண்டும் என்பதுதான். பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணியும் வழக்கம் கொண்டுள்ளனர். ஆனால் எல்லா நாடுகளிலுமே பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் இல்லை.

ஹிஜாப்பிற்கு உள்ளே அணியும் ஆடைகள் தளர்வாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தலை முதல் கால் வரை அவர்கள் முழுவதுமாக ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை ஏதேனும் ஒரு பெண் மீறியதாக சந்தேகிக்கப்பட்டால் அந்தப் பெண்ணை அடிப்பதற்கு காவல்துறைக்கு உரிமை இருக்கிறது, அது மட்டுமல்லாமல் ஆறு மாதங்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கலாம்.

ஈரானிய சட்டத்தின்படி தந்தை, தான் தத்து எடுத்த மகளை திருமணம் செய்து கொள்ள அனுமதி இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு இந்த சட்டம் மற்றும் பழக்கம் தடை செய்யப்பட்டாலும், அதன் பிறகு பாதுகாவலரின் அமைப்பு மற்றும் மதத் தலைவர் அதனை ரத்து செய்து செய்தனர். தத்தெடுக்கப்பட்ட பெண்ணை ஈரானிய தந்தை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். தற்போதுகூட நீதிமன்றத்திடமிருந்து இதற்கான அனுமதி பெற்று திருமணம் நடைபெற்று வருகிறது என்பது வருத்தப்படக் கூடியதாக இருக்கிறது.

ஈரானில் பெண்ணின் திருமண வயது எவ்வளவு என்பது பல முறை மாற்றப்பட்டுள்ளது. ஒரு காலகட்டத்தில் ஒன்பது வயதிலேயே சிறுமிகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற வழக்கமும் இருந்தது. தற்பொழுது சட்டப்படி ஒரு பெண் 13 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல ஆணுக்கு 15 வயது என்பது திருமண வயது. ஈரானிய பெண் தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதுவும் குடும்ப தலைவரின் ஒப்புதலோடு திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் ஈரானிய ஆண் நான்கு முறை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டமும் இருக்கிறது.

திருமணத்திற்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கிறதே பெண்களுக்கு விவாகரத்து வழங்குவதற்கு அனுமதியும் சுதந்திரமும் இருக்கிறதா என்ற கேள்வி எழும்புகிறது! தன்னுடைய கணவன் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார், தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருக்கிறார் அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் ஆகிய காரணங்கள் அடிப்படையில் ஒரு பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறலாம். ஆனால் ஆண்களுக்கான விவகாரத்து மிகவும் எளிதானது. எனக்கு இந்த பெண்ணை பிடிக்கவில்லை நான் விவாகரத்து செய்கிறேன் என்று தனது மனைவியை வெறும் வார்த்தைகளால் கூறி விவாகரத்து செய்து விடலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, காரணங்களும் தேவையில்லை.

வாரிசு உரிமை சட்டத்தின்படி, ஈரானில் ஒரு மனைவி இறந்துவிட்டால், அவரது சொத்துக்கள் முழுவதுமே அவரது கணவனுக்கு சென்று விடும். ஆனால் ஒரு கணவன் இறந்து போனால் விதவையான அந்த பெண்ணுக்கு கணவனின் சொத்தில் எட்டில் ஒரு பங்கு தான் கிடைக்கும். அதேபோல இறந்த போன தந்தையின் சொத்தில் மகளுக்கு எவ்வளவு பங்கு கொடுக்கப்படுகிறதோ அதை விட இரண்டு மடங்கு பங்கு மகனுக்கு கொடுக்கப்படும்.

ஈரானில் விளையாட்டு அரங்கத்தில் ஆண்களோடு அமர்ந்து பெண்கள் விளையாட்டை ரசிக்க முடியாது. அது மட்டுமல்லாமல் பொது இடங்களில் நடமாடுவதற்கும் தடை.

காவல்துறை கஸ்டடியில் இருந்த ஈரானிய பெண்மணி மாஷா அம்மினி என்பவர் கஸ்டடியில் இருக்கும் பொழுதே இறந்து போன சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண் 22 வயதானவர், இவர் காவல்துறையினரின் விசாரணையில் இருக்கும் போது இறந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து பல பெண்களும் தங்களுடைய ஹிஜாப்களை எரித்தும், கூந்தலை கத்தரித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளனர். இவை அனைத்துமே சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Iran