• HOME
 • »
 • NEWS
 • »
 • international
 • »
 • குறைந்த நேரம் இன்டர்நெட்டை பயன்படுத்துவதால் டீனேஜர்களுக்கு கிடைக்கும் பலன் - ஆய்வில் தகவல்!

குறைந்த நேரம் இன்டர்நெட்டை பயன்படுத்துவதால் டீனேஜர்களுக்கு கிடைக்கும் பலன் - ஆய்வில் தகவல்!

 டீனேஜர்

டீனேஜர்

குறைந்த சமூக-பொருளாதார சூழலில் வாழும் சுமார் 200-க்கும் மேற்பட்ட டீனேஜர்கள் பங்கேற்க வைக்கப்பட்டனர். சமீபத்தில் வெளியான புதிய ஆய்வு ஒன்று, டீனேஜர்கள் தொழில்நுட்பத்தை கல்விக்காக மட்டுமே சார்ந்திருக்காமல், தங்களது மனஅழுத்தத்தை நிர்வகிக்கவும் பயன்படுத்துகிறார்கள் என கண்டறிந்துள்ளது.

 • Share this:
  தற்போதைய நவீன காலத்து குழந்தைகள் முற்றிலும் தொழில்நுட்பங்களால் சூழப்பட்டிருக்கிறர்கள். குறிப்பாக கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு நேரடியாக சென்று கல்வி கற்க முடியாத காரணத்தால், தங்களது படிப்பை தொடர முழுக்க முழுக்க தொழில்நுட்பங்ளையே கடந்த ஒன்றரை வருடமாக சார்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் வெளியான புதிய ஆய்வு ஒன்று, டீனேஜர்கள் தொழில்நுட்பத்தை கல்விக்காக மட்டுமே சார்ந்திருக்காமல், தங்களது மனஅழுத்தத்தை நிர்வகிக்கவும் பயன்படுத்துகிறார்கள் என கண்டறிந்துள்ளது. ஜர்னல் கிளினிக்கல் பிசிக்கலாஜி (journal Clinical psychology) என்ற மருத்துவ இதழில் இது தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

  ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் கிரிஃபித் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் இது தொடர்பான தலைமை தாங்கினர். "நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்" (How Do You Feel) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆராய்ச்சியாளர்கள் குறைந்த சமூக-பொருளாதார பகுதிகளில் வாழும் டீனேஜர்கள் மத்தியில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் ஆய்வில் பங்கேற்ற டீனேஜர்களுக்கு புதிய ஐபோன்கள் வழங்கப்பட்டன. அவர்கள் இந்த ஐபோன் மூலம் தொழிநுட்பத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறர்கள், அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களுக்கான காரணம், அவர்களது எமோஷன்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து வாரம் 5 முறை தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

  இந்த ஆய்வில் குறைந்த சமூக-பொருளாதார சூழலில் வாழும் சுமார் 200-க்கும் மேற்பட்ட டீனேஜர்கள் பங்கேற்க வைக்கப்பட்டனர். இதில் தினசரி மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் டீனேஜர்கள் எமோஷ்னல் சப்போர்ட்டை தேடுவது, பிரச்சனைகளில் இருந்து விடுபட சுய திசைதிருப்பல் அதாவது மன அழுத்தம் நிறைந்த நிகழ்விலிருந்து திசைதிருப்ப வேறு வேலைகளில் ஈடுபடுவது அல்லது சிறிது நேர மிதமான செயல்பாட்டின் மூலம் ஆன்லைனில் தெரிந்து கொள்ள விரும்பும் தகவல்களை தேடுவது உள்ளிட்ட செயல்களுக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.

  Stressed Teenagers

  தவிர மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெற ஆன்லைனை சமாளிக்கும் வழியாக டீனேஜர்கள் சில மணி நேரங்கள் பயன்படுத்திய போது, சிறியளவிலான மகிழ்ச்சி குறைவு மற்றும் மனஅழுத்தம் ஏற்பட்ட சில மணிநேரங்களில் சோகம், கவலை மற்றும் பொறாமை போன்ற உணர்ச்சிகளில் சிறிய அதிகரிப்பு உள்ளிட்டவை இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதே சமயம் பிரச்சனைகளில் இருந்து விடுபட நினைத்து ஆன்லைனை சிறிது நேரம் அல்லது மிதமாக பயன்படுத்துவது கவலை, பொறாமை மற்றும் கோபத்தை குறைக்கிறது என்பதையும் கண்டறிந்தனர்.

  ஆக மொத்தம் அதிக நேரம் ஆன்லைன் பயன்படுத்துபவர்களை விட மிதமான அளவு ஆன்லைன் பயன்படுத்தும் டீனேஜர்கள் சோகத்தில் மூழ்காமல் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. இதனிடையே இந்த ஆய்வின் முன்னணி நிபுணரான கேத்ரின் மொடெக்கி கூறுகையில், பின்தங்கிய சமூக அமைப்புகளில் வாழும் டீனேஜ் பருவத்தினர் குறைவான ஆதரவுகளை கொண்டிருப்பதால், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ஆன்லைன் உதவியதா என்பதைக் கண்டறிய தங்களது ஆய்வில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பதற்றமான சூழல் அல்லது மனஅழுத்த அனுபவத்திற்குப் பிறகு ஆன்லைனில் மிதமான நேரத்தை செலவழிக்கும் டீனேஜர்கள், ஆன்லைனில் பல மணிநேரம் செலவழிப்பவர்களை விட அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முற்றிலும் தவிர்ப்பவர்களை விட மிக சிறப்பான பலனை பெறுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: