1973-ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய வேலைக்கான விண்ணப்பம் ஏலத்துக்கு வந்தது..

Job application

ஒரு பக்க கடிதத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறார் என்றும், எந்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார் என்பதற்குமான எந்த அடையாளமும் இல்லை.

  • Share this:
இன்றைய தலைமுறையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, அவர்களது முன்னேற்றத்திற்கு துணைபுரிவது என்றால் அது தொழில்நுட்பங்கள்தான். இப்படி உலகையே இயங்க வைத்துக்கொண்டிருக்கும் இந்த தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னராக ஒருவரை கூறலாம். அவர்தான் APPLE இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். Apple-இன் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் 1973-ஆம் ஆண்டில் தனது கைப்பட எழுதிய வேலைக்கான விண்ணப்பம் இப்போது ஏலத்திற்கு வந்துள்ளது. 

ஒரு பக்க கடிதத்தில் அவர் என்ன வேலைக்கு அப்ளை செய்திருக்கிறார், எந்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார் என்பதற்கான எந்த அடையாளமும் அதில் இல்லை. மேலும் இந்த விண்ணப்பம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2018 ஏலத்தில் $175,000-க்கு ஏலம் போனது. அந்த விண்ணப்பம் மூலம் ஸ்டீவ் ஜாப்ஸ், ரீட்ஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மாணவராக இருந்தது தெரிகிறது. ஸ்கில்ஸ் குறித்த இடங்கள் காலியாகவும், ஜாப்ஸ் என்ற இடத்தில் கம்ப்யூட்டர், கால்குலேட்டர், டிசைன் மற்றும் டெக்னோலஜி என்று ப்ராக்கெட்டிற்குள் எழுதப்பட்டிருந்தன. 

ஸ்டீவ் ஜாப்ஸ்


 மேற்சொன்னது மட்டுமல்லாது `எலக்ட்ரானிக் டெக் அல்லது டிசைன் இன்ஜினியர் இன் டிஜிட்டல்' என்பதை தனது தனி திறன்களாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.  அவரிடம் போன் இருக்கிறதா என்று அப்ளிகேஷனில் கேட்கப்பட்டிருந்தது, அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை என்று எழுதியிருக்கிறார்.`போக்குவரத்துக்கான வழிகள்' என்னும் பிரிவின் கீழ் `சாத்தியம், ஆனால் நம்பவேண்டாம்' என்றும் எழுதியிருந்தார். 

இப்போது இந்த விண்ணப்பம், சார்ட்டர்ஃபீல்ட்ஸ் ஏல இணையதளத்தில் (Charterfields auction website) விற்பனைக்கு வருகிறது. "ஓரிகானின் போர்ட்லேண்டில் உள்ள ரீட் கல்லூரியில் இருந்து தேர்ச்சிக்கு பிறகு அவர் இந்த விண்ணப்பத்தை அவர் எழுதி இருப்பார் என்று நம்பப்படுகிறது. 

இந்த விண்ணப்பம், பார்ப்பதற்கு கொஞ்சம் மடிந்து, அந்த காலத்தில் இருந்த மங்கிய தாளில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 
Published by:Ram Sankar
First published: