யாழ் பல்கலை வளாகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண்...!
2009ம் ஆண்டு நடைபெற்ற அவலத்தை பதிவு செய்யும் இந்த நினைவுத்தூணை திட்டமிட்டே இரவில் அகற்றியுள்ளனர். இதைக் கண்டித்தும் மீண்டும் நினைவுத்தூணை அதே இடத்தில் அமைக்க கோரி இரவிலும் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூணை மீண்டும் நிறுவ துணைவேந்தர் முன்னிலையில் நடவடிக்கை
- News18
- Last Updated: January 11, 2021, 10:49 AM IST
யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூணை மீண்டும் நிறுவ துணைவேந்தர் முன்னிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் சம உரிமைக்காகவும் தனி நாட்டிற்காகவும் கடந்த 2009-ம் ஆண்டுநடை பெற்ற இறுதிகட்டப் போர் நந்திக்கடல் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகளோடு முடிவிற்கு வந்தது. இந்த போரில் இலங்கை அரசின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்களால் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள், குழந்தைகள், பெண்கள், பொது மக்கள் என சற்றேறக்குறைய 2 லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
வெள்ளைக்கோடி ஏந்தி சரணடைந்த போராளிகளும் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த இனப் படுகொலைக்கு நீதி கேட்டும் போர்க் குற்ற விசாரணை கோரியும் சர்வதேச அளவில் தமிழர்கள் போராடி வருகின்றனர். அதே நேரத்தில், தமிழர் பகுதிகளில் இப்போதும் சிங்கள ராணுவ கட்டுப்பாடும் அடக்குமுறைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்கிற குற்றச்சாட்டை நிருபிக்கும் வகையில் தற்போது ஒரு நிகழ்வும் நடைபெற்றுள்ளது. இலங்கையின் வடக்குப் பகுதியில் யாழ்பாணம் மாவட்டத்தில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் அமைப்புகளால் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. உலக நாடுகளிடம் உதவி கேட்டு கைகளை ஏந்தி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவுத் தூணை கடந்த 08ம் தேதி இரவோடு இரவாக இடித்து அப்புறப்படுத்தினர். அண்மையில் நியமனம் பெற்ற சிங்கள ஆதரவு துணைவேந்தரால் இது நடைபெற்றுள்ளது.
2009ம் ஆண்டு நடைபெற்ற அவலத்தை பதிவு செய்யும் இந்த நினைவுத்தூணை திட்டமிட்டே இரவில் அகற்றியுள்ளனர். இதைக் கண்டித்தும் மீண்டும் நினைவுத்தூணை அதே இடத்தில் அமைக்க கோரி இரவிலும் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்தற்கு, தாமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன், இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.Also read... இடஒதுக்கீடு குறித்து ராமதாசுக்கு 6 கேள்விகள்: முரசொலியில் வெளியான கடிதம்!
மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திய சில மணி நேரங்களில் இந்த இடிப்பு நடைபெற்றுள்ளதும் கடும் கண்டனத்திற்குள்ளானது.
இந்நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூணை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய மாணவ அமைப்புகளிடம் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் சற்குணராஜா உறுதியளித்தபடி, பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் அமைக்க மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கின. இதில், பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இலங்கைத் தமிழர்கள் சம உரிமைக்காகவும் தனி நாட்டிற்காகவும் கடந்த 2009-ம் ஆண்டுநடை பெற்ற இறுதிகட்டப் போர் நந்திக்கடல் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகளோடு முடிவிற்கு வந்தது. இந்த போரில் இலங்கை அரசின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்களால் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள், குழந்தைகள், பெண்கள், பொது மக்கள் என சற்றேறக்குறைய 2 லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
வெள்ளைக்கோடி ஏந்தி சரணடைந்த போராளிகளும் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த இனப் படுகொலைக்கு நீதி கேட்டும் போர்க் குற்ற விசாரணை கோரியும் சர்வதேச அளவில் தமிழர்கள் போராடி வருகின்றனர். அதே நேரத்தில், தமிழர் பகுதிகளில் இப்போதும் சிங்கள ராணுவ கட்டுப்பாடும் அடக்குமுறைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்கிற குற்றச்சாட்டை நிருபிக்கும் வகையில் தற்போது ஒரு நிகழ்வும் நடைபெற்றுள்ளது.