2019 ஜனவரி தமிழ்ப் பண்பாட்டு மாதமாக பிரகடனம்...! அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த கவுரவம்

வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும், வடக்கு கரோலைனா மாநிலத்தில் வளர்த்தெடுத்து பாதுகாத்துள்ளார்கள் என்று மாநில கவர்னர் கூறியுள்ளார்.

2019 ஜனவரி தமிழ்ப் பண்பாட்டு மாதமாக பிரகடனம்...! அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த கவுரவம்
அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த கவுரவம்
  • News18
  • Last Updated: January 30, 2019, 6:08 PM IST
  • Share this:
அமெரிக்காவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான வடக்கு கரோலினாவில் 2019 ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாக பிரகடனம் செய்து கவர்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய மாநிலமான வடக்கு கரோலினாவில் அதிகளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அம்மாநில அரசியலிலும் அவர்கள் குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தினர் ஜனவரி மாதத்தை தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவிக்க கோரிக்கை விடுத்தனர்.

தமிழர்களின் கோரிக்கையை ஏற்று அம்மாநில கவர்னர் ராய் கூப்பர், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் “தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதம்” ஆக அனுசரிக்கப்படும் என்று பிரகடனம் செய்துள்ளார்.


பிரகடன அறிவிப்பு


இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராய் கூப்பர், “வடக்கு கரோலினாவில் வசிக்கும் தமிழர்கள், மாநிலத்தின் பன்முக கலாச்சாரத்திற்கு பெருமளவில் பங்காற்றியுள்ளார்கள். வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும், வடக்கு கரோலைனா மாநிலத்தில் வளர்த்தெடுத்து பாதுகாத்துள்ளார்கள்.

இந்தியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் அமெரிக்காவின் பல மாநிலங்கள், பல வெளி நாடுகளில் தமிழ் மொழி பெருமளவில் பேசப்படுகிறது. தமிழ் மொழி தான் தமிழர்களின் அடையாளம். உலகில் இன்னும் எழுத்தப்பட்டும், பேசப்பட்டும் இருக்கும் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ்.

வடக்கு கரோலைனாவில் வசிக்கும் தமிழர்கள், தமிழ்ப்பள்ளிகள் அமைத்து இளைய தலைமுறையினருக்கு எழுதப் படிக்கை வைத்து, வருங்காலத்தில் பல தலைமுறை தாண்டியும் தமிழ் மொழியையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பேணிக்காப்பதற்காக முயற்சி எடுத்து வருகிறார்கள். அது பல வழிகளிலும் நமது மாநிலத்தின் சமூக பொருளாதார, கலாச்சார வரலாற்று வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.

தமிழ் காலண்டரின் முதல் மாதமான தை மாதத்தின் முதல் நாளை தைப் பொங்கல் என 4 நாட்கள் விழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். வட கரோலைனா மாநிலமும், தமிழர்களுடன் இணைந்து தைப் பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியுள்ளார். மாநிலத்தின் அனைத்து குடிமக்களும்

இதனை அனுசரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also See..

First published: January 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்