Home /News /international /

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்... கொந்தளிக்கும் பொதுமக்கள்!

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்... கொந்தளிக்கும் பொதுமக்கள்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Sri Lanka : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில் இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கொதித்தெழுந்த மக்கள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த மக்கள் கடந்த சனிக்கிழமை முதல், அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். இலங்கையில் வரும் 20ஆம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு நடைபெறும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால், கோத்தபய ராஜபக்ச, சிறப்பு விமானப்படை விமானம் மூலம் இன்று அதிகாலை மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றார். கொழும்புவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் கோத்தபய ராஜபக்ச, அவரது மனைவி, மெய்க்காவலர் உள்ளிட்ட 4 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    Must Read : “ஆடியோ பொன்னையன் உடையது தான்” - சர்ச்சை ஆடியோ குறித்து கன்னியாகுமரி நிர்வாகி கோலப்பன் விளக்கம்

    அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமல் இலங்கையை விட்டு மாலத்தீவுகளுக்கு கோத்தபய ராஜபக்ச தப்பியோடிய நிலையில், இலங்கையில் போராட்டம் நீடித்து வருகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக கோரி அங்கு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்கே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gotabaya Rajapaksa, Sri Lanka

    அடுத்த செய்தி