முக கவசம் அணியாமல் வந்த பெண்ணுக்கு சேவை மறுப்பு - கடமையை செய்த ஊழியருக்கு ₹ 72 லட்சம் அன்பளிப்பு

அமெரிக்காவில் முகக் கவசம் அணியாமல் வந்த வாடிக்கையாளருக்கு சேவை செய்ய மறுத்த ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியருக்கு 72 லட்ச ரூபாய் அன்பளிப்பாக கிடைத்துள்ளது.

முக கவசம் அணியாமல் வந்த பெண்ணுக்கு சேவை மறுப்பு - கடமையை செய்த ஊழியருக்கு ₹ 72 லட்சம் அன்பளிப்பு
(Image credit: Twitter/ @kevsioco)
  • Share this:
சான் டியாகோ நகரில் உள்ள ஸ்டார் பக்ஸ் கடைக்குச் சென்ற ஏம்பர் லீன் கீல்ஸ் என்னும் பெண், தான் முக கவசம் அணியாமல் சென்றதால் கடை ஊழியர் தனக்கு சேவை அளிக்க மறுத்ததாகக் கூறி, ஃபேஸ் புக்கில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டார்.

அடுத்த முறை முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கும் மருத்துவரின் பரிந்துரையோடு அந்த கடைக்குச் செல்லப் போவதாக ஆத்திரத்துடன் அவர் பதிவிட்டிருந்தார்.அந்தப் பதிவில் ஸ்டார் பக்ஸ் கடையின் ஊழியர் லெனின் குட்டரெஸின் படத்தையும் அவர் இணைத்திருந்தார். இந்நிலையில் ஏம்பர் லீன் எதிர்பார்த்ததற்கு மாறாக லெனினுக்கு ஃபேஸ்புக்கில் ஆதரவு பெருகியது.

கடமையைச் சரியாகச் செய்த லெனினுக்கு டிப்ஸ் கொடுக்க ஆசைப்பட்ட சிலர் அவருக்காக இணையம் வழியாக நிதி திரட்டினர். இதில் தற்போது வரை 72 லட்ச ரூபாய் குவிந்துள்ளது.

Also read... சீனாவில் கிருமிநாசினி தெளிப்பதற்காக பீரங்கி வடிவிலான ரோபோட்தனக்கு கிடைத்த ஆதரவை எண்ணி நெகிழ்ந்த லெனின் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று அந்த பதிவில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading