இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று 26 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் மட்டும் பதவியில் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதாக தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்துள்ள இலங்கை அரசு மகிந்தா பதவியில் தொடர்வார் என்று கூறியுள்ளது. ராஜினாமா குறித்து, இலங்கை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே கூறுகையில், 'அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவை தவிர்த்து மற்ற அனைத்து அமைச்சர்களும் தங்களது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். ஞாயிறன்று இரவு நடந்த கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க - இலங்கையில் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து சமூகவலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- ஊரடங்கை மீறி தொடரும் போராட்டம்
தலைநகர் கொழும்புவில் எதிர்க்கட்சி தலைவர் சாஜித் பிரேமதாசா தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அவர்களை ஆயுதம் ஏந்திய போலுசார் தடுத்து நிறுத்தினர்.
இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்கத்தால் அந்நாடு தீவிரமாக பாதித்த நிலையில், தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கே தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைய என்ன காரணம்? அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்...
உணவு, எரிபொருள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஒருபக்கம் காணப்பட்டாலும் இன்னொரு பக்கம் அத்தியாவசிய பொருட்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இவற்றை வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் மக்கள் தவித்து வருகிறார்கள். கடும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். வன்முறை ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்கும் விதமாக இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகப்படும் எவரையும் எந்த விசாரணையும் இன்றி கைது செய்யும் அதிகாரம் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதால் இலங்கையில் உச்சகட்ட குழப்பமும், பரபரப்பும் காணப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.