இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. கோத்தபய மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அரசு நிர்வாகத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மித மிஞ்சிய கடன் சுமையால் சிக்கித் தவிக்கும் இலங்கை, பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை பன்மடங்கு உயர்ந்ததுடன் அவை தட்டுப்பாட்டில் இருப்பதால் கொந்தளித்த பொதுமக்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திடீர் திருப்பமாக நேற்று அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை தவிர்த்து மற்ற அனைத்து அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்தார்கள். இதன் தொடர்ச்சியாக அனைத்துக் கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு அதிபர் கோத்தபய அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளும் நிராகரித்துள்ளன. இதன்பின்னர் 4 அமைச்சர்களை மட்டும் அதிபர் கோத்தபய நியமித்தார். இவர்கள் நிதி, கல்வி, வெளிநாட்டு விவகாரம், நெடுஞ்சாலை ஆகிய துறைகளை கவனிப்பார்கள்.
கோத்தபய அழைப்பை புறக்கணித்த எதிர்க்கட்சியினர் கூறியதாவது- மக்கள் கோத்தபய அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். நாங்கள் அவர்கள் பக்கம் நிற்கிறோம். முதலில் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்பின்னர்தான் நெருக்கடியை சமாளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க - உக்ரைன் எரிபொருள் கிடங்கில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்..!
இலங்கை பொருளாதார நெருக்கடியை ஒரு நாள் இரவில் முடிவுக்கு கொண்டு வர முடியாது. இதற்கு 6 மாதம் அல்லது ஓராண்டு தேவைப்படலாம். அதற்காக இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால் மக்களின் நம்பிக்கையை இழந்த கோத்தபய, மகிந்தா ராஜபக்சே அரசு பதவியில் நீடிக்க கூடாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், ராஜபக்சே குடும் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க கூடாது, அமைச்சரவையை மாற்றுவது தீர்வாக அமையாது என்பது உள்ளிட்ட வாசகங்களுடன் அதிபரை கடுமையாக விமர்சிக்கும் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Srilanka