இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை!

இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மொத்தம் 122 எம்.பி.க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

news18
Updated: December 3, 2018, 10:57 PM IST
இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை!
ராஜபச்சே
news18
Updated: December 3, 2018, 10:57 PM IST
இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனிடையே, இலங்கையில் எந்த அரசும் செயல்படவில்லை என்றும், பிரதமராக யாரும் இல்லை என்றும் அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மொத்தம் 122 எம்.பி.க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில் பிரதமர் ராஜபக்சேவும், அவரது அமைச்சரவையும் சட்டத்திற்கு புறம்பாக நியமனம் செய்யப்பட்டதாகவும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்தபோதும், ராஜபக்சே பிரதமர் அலுவலகத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர இடைக்காலத் தடை விதித்தது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம்.

நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் சிறிசேனா, இலங்கையில் எந்த அரசும் செயல்படவில்லை என்றும் பிரதமராக யாரும் இல்லாததால் புதிய அமைச்சரவையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்குள் முக்கிய முடிவை எடுக்க உள்ளதாகவும் அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.

Also watch

First published: December 3, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...