முகப்பு /செய்தி /உலகம் / இலங்கை அதிபர் ராஜபக்ச தமிழில் தீபாவளி வாழ்த்து - ஸ்பெஷல் வீடியோ வெளியீடு

இலங்கை அதிபர் ராஜபக்ச தமிழில் தீபாவளி வாழ்த்து - ஸ்பெஷல் வீடியோ வெளியீடு

Mahinda Rajapaksa

Mahinda Rajapaksa

சிங்களத்தில் பேசும் மகிந்த ராஜபக்ச வீடியோவின் இறுதியாக உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

தீபாவளி பண்டிகைக்காக இலங்கை தமிழர்களுக்கு அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளி இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் இருளை நீக்கி ஒளியை கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள், புத்த மதத்தின் நேவர் பிரிவினர், ஜைனர்கள் போன்ற பிற மதத்தவரும் இந்த பண்டிகையை தாந்த்ரேயாஸ், லக்‌ஷ்மி பூஜை, கோவர்தன பூஜை, விஸ்வகர்ம பூகை என வெவ்வேறு பெயர்களில் நவம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை கொண்டாடுகின்றனர்.

தீபாவளி பண்டிகை இந்தியா தவிர்த்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், மியான்மர் மற்றும் பிஜி போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது, தீபாவளி பண்டிகைக்காக அங்கு அரசு விடுமுறையும் விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழர்கள் மிகுதியாக வசிக்கும் இலங்கையில் தீபாவளி பண்டிகைக்காக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also read:   பெட்ரோல், டீசல் விலையில் கூடுதலாக 7 ரூபாய் குறைத்த கர்நாடகா, புதுவை அரசுகள்!

மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அறியாமை இருள் அகற்றி  அன்பெனும் ஓளியேற்றி அனைவரும் ஒன்றிணைவோம் இத்தீபாவளித்திருநாளில்! ” என தலைப்பிட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இருள் நீங்க வேண்டும் என்றால் ஒளி ஏற்ற வேண்டும். இலங்கை மக்களின் துன்பம் அனைத்தும் நீங்கி, ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழும் காலம் மலரட்டும். தீபாவளி நன்னாளிலே இப்பிரார்த்தனையுடன் அன்பு நிறைந்த உள்ளத்துடன் தீப ஒளி ஏற்றுவோம் என சிங்களத்தில் பேசும் மகிந்த ராஜபக்ச வீடியோவின் இறுதியாக உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் இதே போல ராஜபக்ச தீபாவளி வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Deepavali, Diwali, Mahinda Rajapakse, Srilanka