Home /News /international /

குடும்ப உறுப்பினர்கள் பலர் நீக்கம் - 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை நியமித்த இலங்கை அதிபர்

குடும்ப உறுப்பினர்கள் பலர் நீக்கம் - 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை நியமித்த இலங்கை அதிபர்

கோத்தபய ராஜபக்சே

கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் கோத்தபயா குடும்ப உறுப்பினர்கள் பலரை நீக்கி 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமித்துள்ளார்.

இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமாகத் தொடர்ந்து வரும் நிலையில், அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே புதிய அமைச்சரவையை இன்று அமைத்துள்ளார்.

சுமார் ஒரு மாத காலமாக இலங்கையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி பிரதமர் மகிந்தா ராஜபக்ஷேவைத் தவிர 26 அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அதிபர், பிரமதர் உள்பட ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும் என மக்களும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதையடுத்து எதிர்க்கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்று ஒன்றிணைந்த அரசை நடத்தலாம் என அதிபர் கோத்தபயா எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்தன.

இந்நிலையில், 17 பேர் கொண்டு புதிய அமைச்சரவையை கோத்தபயா இன்று நியமித்துள்ளார். இவர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இந்த புதிய அமைச்சரவையில் அதிபரின் சகோதரர் மகிந்தாவைத் தவிர ஏனைய குடும்ப உறுப்பினருக்கு இடமில்லை.

அமைச்சர்களாக இருந்த மற்றொரு சகோதரர் சமல், மகிந்தாவின் மகன் நமல் ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை சீனியாரிட்டியின் அடிப்படையில் அமைக்கப்படவில்லை. புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அமைச்சர் பதவி என்பது மக்களுக்கு சேவை செய்ய பெரும் வாய்ப்பாகும்.

எனவே, இதை பொறுப்புடன் புதிய நபர்கள் பயன்படுத்த வேண்டும். அரசு சுமூகமாக இயங்க இதுபோன்ற சிறிய எண்ணிக்கையிலான அமைச்சரவையே தொடரும் என தெரிவித்துள்ளார். 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து முன்பு இல்லாத அளவிற்கு பெரும் பொருளாதார நெருக்கடியை அந்நாடு சந்தித்துவருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைக்காக காஷ்மீர் PhD மாணவர் கைது

அத்தியாவசிய பொருள்கள் கடும் விலையேற்றத்தை சந்தித்துவரும் நிலையில் மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். எரிவாயு, உணவு, அடிப்படை மருந்துகள் ஆகியவற்றுக்கு மாபெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாவை மையமாகக் கொண்டுள்ள நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் நாட்டின் சுற்றுலாத் துறை முடங்கியது. இதுவே அந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
Published by:Karthick S
First published:

Tags: Gotabaya Rajapaksa, Srilanka

அடுத்த செய்தி