• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • நவம்பர் 5-ல் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: பிரதமராக ரணில் தொடர வாய்ப்பு?

நவம்பர் 5-ல் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: பிரதமராக ரணில் தொடர வாய்ப்பு?

ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் 2015-ல் நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான இடங்களில் வென்று, அதிபர் சிறிசேனா ஆதரவுடன் பிரதமரான ரணில் விக்ரமசிங்கேவை, கடந்த 26-ம் தேதி பதவிநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் சிறிசேனா.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா நவம்பர் 5-ம் தேதி கூட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பதவிநீக்கம் செய்ததாக அறிவிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தன் பலத்தை நிரூபிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இலங்கையில் 2015-ல் நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான இடங்களில் வென்று, அதிபர் சிறிசேனா ஆதரவுடன் பிரதமரான ரணில் விக்ரமசிங்கேவை, கடந்த 26-ம் தேதி பதவிநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் சிறிசேனா.

    அதை ஏற்காத ரணில், தான் பிரதமராக தொடர்வதாகவும், நாடாளுமன்றத்தில் பலத்தை நிரூபிக்கத் தயார் என்றும் கூறினார். உடனே, நாடாளுமன்றத்தினை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்கி வைப்பதாக அதிபர் அறிவித்தார். கடந்த ஏப்ரலில் அதிபர் சிறிசேனா, ராஜபக்ச உதவியுடன் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, ரணில் விக்ரமசிங்கே முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, சிறிசேனாவை கொல்ல ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டதாகவும் அதிபர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதிபரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இரு இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியை, விக்கிரமசிங்கே சந்தித்த அடுத்த வாரமே சீன ஆதரவாளரான ராஜபக்சவை பிரதமராக சிறிசேனா நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆட்சிக் கலைப்புக்கு காரணங்களைக் கூறிய சிறிசேனா, ரணில் ஆட்சியில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும், தன்னிச்சையாக நடந்து கொள்வதாகவும், தன்னைக் கொல்ல சதி செய்ததாகவும் விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் அதிபரை புதன்கிழமை சந்தித்த சபாநாயகர் கரு ஜெயசூரியா, ரணில் பிரதமராக தொடர்வதாகவும், நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் புதன்கிழமை கேட்டுக்கொண்டார். இதனிடையே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணிலை நீக்கியதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அதைத் தொடர்ந்து திடீர் திருப்பமாக, நாடாளுமன்றத்தை நவம்பர் 5-ம் தேதி கூட்ட அதிபர் சம்மதித்ததாக ராஜபக்ச கூறியுள்ளார்.

    நாடாளுமன்றம் கூடவுள்ளதால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ரணிலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கையில் ஜனாதிபதியின் பெரும்பாலான அதிகாரங்கள் 2015-ல் பறிக்கப்பட்ட நிலையில், ரணிலை நீக்கியது சட்டப்பூர்வமாக செல்லாது என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    225 பேர் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. அதிபர் சிறிசேனா கூட்டணியில் 101 எம்.பி.கள் உள்ளனர். ரணில் விக்ரமசிங்கே அணியில் சபாநாயகருடன் சேர்த்து 101 பேர் உள்ளனர். 16 பேர் அடங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரணிலுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பிரதமராக ரணில் தொடரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: