Home /News /international /

சீமான் ஆமைக்கறி சொல்வதுபோல இவரும் பேசுகிறார்- இலங்கை எம்.பியின் காட்டமான விமர்சனம்

சீமான் ஆமைக்கறி சொல்வதுபோல இவரும் பேசுகிறார்- இலங்கை எம்.பியின் காட்டமான விமர்சனம்

சீமான்

சீமான்

இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவரை சக எம்.பி இலங்கையின் சீமான் என்று விமர்சனம் செய்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்துவருகிறார். இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற தமிழர் இனப்படுகொலைக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியைத் தொடங்கி தீவிரமாக அரசியல் களத்தில் சீமான் செயல்பட்டுவருகிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சீமான் தனது வழிகாட்டியாக கொண்டுள்ளார். அதனால், அரசியல் பிரச்சார மேடைகளில் பேசும்போது பிரபாகரன் குறித்து அடிக்கடி பேசுவார்.

    குறிப்பாக, இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்தது குறித்து அதிக விஷயங்களை சீமான் பகிர்ந்துள்ளார். அவருடைய பேச்சில் இலங்கையில் ஆமைக் கறி சாப்பிட்டேன் பேசியது விவாதப் பொருளானது. மேலும், பிரபாகரன் குறித்து சீமான் பொய் சொல்கிறார் என்றும் அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளன. இந்த நிலையில், சீமான் பேசிய ஆமைக்கறி விவகாரம் தமிழ்நாட்டைக் கடந்து இலங்கை நாட்டிலும் எதிரொலித்துள்ளது.

    இலங்கை நாடாளுமன்றத்தில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்து பேசினார்.

    தமிழினத்தை வைத்து, ஆமைக்கறி, பூனைக்கறி என்ற கதைகளை சொல்லி, தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் துன்பங்களையும் வைத்து தமிழ் நாட்டிலுள்ள சீமானை போலபிழைப்பு நடத்துவது போல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உருவெடுத்துள்ளார். இலங்கையின் சீமான், அதாவது தமிழர்களின் சீமான் என்றே அவரை சொல்ல வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Seeman, Srilanka

    அடுத்த செய்தி