குண்டு வெடிப்பு விவகாரம்! இலங்கை அமைச்சரின் சகோதரர் கைது

இலங்கையில் குண்டு வெடித்த பகுதி.

அந்த குண்டு வெடிப்பில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் இலங்கை வர்த்தக அமைச்சர் பதியூதினின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். இது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று தொடர்ச்சியாக எட்டு இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது. அந்த குண்டு வெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

  இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றிருந்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்நாட்டின் புலனாய்வு அமைப்புகள் 60 பேர் வரை கைது செய்திருந்தனர்.

  இந்தநிலையில், குண்டு வெடிப்பு விவகாரத்தில் இலங்கை வர்த்தகத்துறை அமைச்சர் பதியூதினின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

  Also see:

  Published by:Karthick S
  First published: