Home /News /international /

பெட்ரோல் வாங்க பணம் இல்லை: பங்குகளில் காத்திருக்க வேண்டாம்- இலங்கை அமைச்சர்

பெட்ரோல் வாங்க பணம் இல்லை: பங்குகளில் காத்திருக்க வேண்டாம்- இலங்கை அமைச்சர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

இலங்கையில் பெட்ரோல் வாங்க பணம் இல்லாததால் மக்கள் பங்குகளில் காத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மின் வெட்டு, உணவு, மருந்து, பெட்ரோல் தட்டுப்பாடு என பல்முனை தாக்குதலுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெட்ரோலை பெற அந்நிய செலாவணி இல்லை என எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். பெட்ரோல் வங்கிகளில் மக்கள் காத்துக்கிடக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    எனினும் தேவையான அளவிற்கு டீசல் இருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கப்பல் நிறுவனத்திற்கு ஏற்கெனவே 400 கோடி ரூபாய் நிலுவைத் தொகை தர வேண்டும் என்றும் அந்த தொகை அளிக்கப்பட்ட பின்பே, மேலும் பெட்ரோல் வாங்க முடியும் என்றும் விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய, உலக வங்கி சுமார் 125 கோடி ரூபாய் இடைக்கால நிதியாக அளித்துள்ளது. இதனை பெட்ரோல் இறக்குமதிக்கு செலவிட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசின் சார்பில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்துள்ளார்.

    ஒரு நாளுக்குதான் பெட்ரோல் கையிருப்பில் உள்ளது - முதல் உரையில் இலங்கை பிரதமர் ரணில் கவலை

    சென்னை துறைமுகத்தில் இருந்து அத்தியாவசியப் பொருட்களுடன், டான்பின் 99 கப்பல் கொழும்பு புறப்பட்டது. இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துபொருட்கள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 5 ஆயிரம் டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 55 வகையான அத்தியாவசிய மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இலங்கையோடு இந்தியாவை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்விட்டரில் ஒப்பிட்டு இருக்கிறார். மதக்கலவரங்கள், பெட்ரோல் விலை, வேலையில்லா திண்டாட்டம் என்ற மூன்று விவகாரங்களில் இருநாடுகளை ஒப்பிட்டு வரைபடம் ஒன்றையும் அவர் பகிர்ந்து இருக்கிறார். மக்களை திசைதிருப்புவதன் மூலம் உண்மைகளை மாற்ற முடியாது என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இந்தியாவும் இலங்கை போன்ற சூழலில் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Srilanka

    அடுத்த செய்தி